கத்தார் வாழ் ஸ்ரீ ஜயர்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் பழைய மாணவர்கள் கிரிக்கெட் போட்டியின் சாம்பினயனான மெல்போர்ன் சாலஞ்சர்ஸ் அணி...!


எம்.என்.எம்.அப்ராஸ்-

த்தார் வாழ் ஸ்ரீ ஜயர்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் பழைய மாணவர்களால் வருடந்தோரும்(2023)ஒழுங்கமைக்கப்படும் கிரிக்கெட் போட்டியின் சாம்பினயனாக மெல்போர்ன் சாலஞ்சர்ஸ்(MELBOURNE CHALLANGERS) அணியினர் தனதாக்கிக் கொண்டனர்.

கத்தார் வாழ் ஸ்ரீ ஜயர்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் பழைய மாணவர்களால் வருடந்தோரும் ஒழுங்கமைக்கப்படும் கிரிக்கெட் தொடர் இம்முறையும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. 

சுமார் 60க்கு மேற்பட்ட பழைய மாணவர்கள் கலந்து கொண்ட இத்தொடரில் விடுதி அறைகளின் பெயரினை கொண்டு ஆறு அணிகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டியில் மெல்போர்ன் சாலஞ்சர்ஸ் அணி(MELBOURNE CHALLANGERS) மற்றும்போஸ் ரூம் புல்லட்ஸ் அணி(BOSS ROOM BULLETS)மோதின.

 மிகவும் விறுவிறுப்புடன் கத்தார் பேர்லிங்க் சீசன் சர்வதேச பாடசாலையில்(Pearling Season International School) கடந்த வியாழன் (21)இடம்பெற்ற இறுதி போட்டியில் முதலில் துடுப்பாடிய போஸ் ரூம் புல்லட்ஸ் அணியினர்(BOSS ROOM BULLETS) நிர்ணிக்கப்பட்ட 05 ஓவர்கள் முடிவில் 06 விக்கட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களை பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பாடிய மெல்போர்ன் சாலஞ்சர்ஸ் (MELBOURNE CHALLANGERS)அணியினர்4.4ஒவரில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்று கத்தார் வாழ் ஸ்ரீ ஜயர்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் பழைய மாணவர்கள்(2023)சாம்பியன் அணியாக தனதாக்கிக் கொண்டனர்.

 இத் தொடரில் சிறந்த வீரராக போஸ் ரூம் புல்லட்ஸ் (BOSS ROOM BULLETS)அணியின் எம்.அய்யாஸ் தெரிவு செய்யப்பட்டதோடு,இறுதி ஆட்டத்தின் ஆட்டநாயகனாக மெல்போர்ன் சாலஞ்சர்ஸ் அணியின் (MELBOURNE CHALLANGERS) எம்.சர்ராஜ் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :