போதை பாவனையை இல்லாமலாக்க சிகை அலங்கார தொழிலாளர்கள்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
சிகை அலங்கார தொழிலாளர்கள் போதை பாவனையை இல்லாமல் செய்வோம் எனும் தொனிப் பொருளில் தாங்கள் செயற்படவுள்ளதாக வரையறையுள்ள கல்குடா தொகுதி சிகை அலங்கார தொழிலாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இன்று நாட்டில் பொருளாதார பிரச்சினையை விட போதைப்பாவனை இளைஞர்கள் மத்தியில் மிகவும் மோசமாக பரவி வருகின்றது இதனை கட்டுப் படுத்தும் நோக்கில் தங்களிடம் சிகை அலங்காரத்திற்கு வரும் இளைஞர்களை சீர் திருத்த முயற்சிக்கும் வகையில் சிகை அலங்கார அமைப்பின் உறுப்பினர்கள் ஒன்றினைந்து தீர்மானித்துள்ளனர்.

வரையறையுள்ள கல்குடா தொகுதி சிகை அலங்கார தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.எம்.இர்பான் தலைமையில் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம் பெற்ற கூட்டத்தின் போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இக் கூட்டத்தில் வாழைச்சேனை விஷேட அதிரடிப்படை முகாமை சேர்ந்த அதிகாரிகளான ஆர்.எம்.ரத்னாயக்க, எச்.எம்.ஐ.ஹேரத், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.ஷிஹான், ஓட்டமாவடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி ஏ.எல்.எம்.முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :