மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான விசேட கலந்துரையாடல்


லையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வன் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இச்சந்திப்பில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ்.சமரதிவாகர, காணி அமைச்சின் செயலாளர், காணி மறுசீரமைப்பு குழுவின் தலைவர், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, காணி ஆணையாளர், மற்றும் துறைசார் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் அல்ல பெருந்தோட்டங்களில் உள்ள அனைவருக்கும் காணி உரிமை அவசியம் என இதன்போது அமைச்சர் எடுத்துரைத்தார்.

அதற்கான பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், அது துரிதப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்துவத்தையும் எடுத்துரைத்துள்ளார்.

பெருந்தோட்டப்பகுதிகளில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கும் காணி உரித்து பெற்றுக்கொடுக்கப்படும் என்றார்.


ஊடக செயலாளர்
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :