நீண்ட காலமாக நிந்தவூரில் பாதிப்பை ஏற்படுத்திவரும் கடலரிப்பினைப்பற்றி எந்தவித அக்கறையுமின்றி இருந்த முஸ்லிம் காங்கிரஸினர் இப்போது கடலரிப்பின் விளைவுகளை நேரில் சென்று பார்வையிடுவதாக மக்களுக்கு படம் காட்டி ஏமாற்றுகின்றனர் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சியின் தவிசாளர் அஹமட் ரஷாத் தெரிவித்திருப்பதாவது,
நிந்தவூர் போன்ற கரையோர பகுதிகள் கடலரிப்புக்கு முகம் கொடுப்பது மிக நீண்ட கால பிரச்சினையாகும்.
கடந்த நல்லாட்சியில் ரவூப் ஹக்கீமும், பைசல் காசிமும் அமைச்சர்களாகவும் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு ஆளுனராகவும் முழு அதிகாரங்களுடன் இருந்த காலத்திலும் நிந்தவூரும் கல்முனை, சாய்ந்தமருதும் இப்பிரச்சினைக்கு முகம் கொடுத்தது.
அரசியல் அதிகாரம் இருந்த போது மக்கள் பிரச்சினையை பார்க்காமல் தூங்கிக்கொண்டிருந்த மு. கா தலைவர் ஹக்கீமும், பைசல் காசிமும், முன்னாள் அமைச்சர் ஹிஸ்புள்ளாவும்,முன்னாள் இந்நாள் மு. கா பாராளுமன்ற உறுப்பினர் சிலரும் தேர்தல் எந்நேரமும் வரலாம் என்றிருக்கும் இன்றைய நிலையில் அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் ஏமாளிகள் என நினைத்துக்கொண்டு சுற்றுலா பயணிகள் போன்று நிந்தவூர் கடலரிப்பை பார்வையிட்டுள்ளனர். நிந்தவூர் மக்கள் முற்றாக பாதிக்கப்பட்ட பின் அடுத்த முறையும் வந்து பார்வையிடுவர். இதுதான் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளின் நிலையாகும். இவர்கள் மக்கள் பிரச்டினைகளை தீர்ப்பதற்கு பதிலாக பிரச்சினைகள் அப்படியே இருக்கிறதா என பார்வையிட்டு மக்களுக்கு படம் காட்டுவதில்தான் முனைப்பாக உள்ளனர்.
இன்னும் கொஞ்ச நாளில் துபாயில் கடலுக்குள் நகரம் கட்டப்பட்டுள்ளது போல் நிந்தவூர் கடலுக்குள் மாடி வீடு கட்டுவோம் என்று கூட ரவூப் ஹக்கீம் சொல்வார். அதற்கும் கை தட்டி ஆரவாரம் செய்யும் முட்டாள் கூட்டமே இன்னமும் அம்பாரை மாவட்டத்தில் காணப்படுகிறது.
மக்களை ஏமாற்றுவது மிக எளிது, ஆனால் தாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதை மக்கள் உணர்ந்து தமது எதிர்ப்பை காட்டாத வரை ஏமாற்றுவோர் ஏமாற்றிக்கொண்டே இருப்பர்.
0 comments :
Post a Comment