எம்.எம்.றம்ஸீன்-
கல்முனை அஸ் ஸம்ஸ் விளையாட்டுக் கழகத்தின் புதிய சீருடை அறிமுக போட்டி கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக்கழகத்துடன் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கல்முனை அஸ்-ஸம்ஸ் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை அஸ்-ஸம்ஸ் விளையாட்டுக்கழகம் 17.5 பந்துவீச்சு ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 81 ஓட்டங்களை பெற்றது.
அஸ்-ஸம்ஸ் விளையாட்டுக்கழகம் சார்பாக துடுப்பாட்டத்தில் அதிகூடிய ஓட்டமாக 22 ஓட்டத்தினை இர்ஸாத் பதிவு செய்தார். பந்துவீச்சில் இபாத் 4 ஓவர்களுக்கு 19 ஓட்டங்களை வ
கொடுத்து 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
82 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக்கழகம் 17.5 பந்துவீச்சு ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக்கழகம் சார்பாக பிராஸ் 34 ஓட்டங்களை பெற்று போட்டியின் சிறப்பாடடைக்காரராகவும் தெரிவுசெய்யப்பட்டார். பந்துவீச்சில் நிப்ராஸ் 4 ஓவர்களுக்கு 18 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
கல்முனை அஸ்-ஸம்ஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எல்.எம்.சர்ஜூன் அவர்களின் வழிகாட்டலில் இப்போட்டிக்கு பிரதம அதிதியாக அல் மாஸா ஜுவல்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.அப்துஸ் ஸமட் அவர்களும் கௌரவ அதிதிகளாக சட்டத்தரணி ஏ.எம்.றொஸான் அக்தர், எம்.ஜே. நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.எச்.எம்.முனாஸ் மற்றும் சிறப்பு அதிதிகளாக யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.எம்.மர்ஸுக், அஸ்-ஸம்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகர் எம்.ஐ.எம்.ஜிப்ரி, யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் ஏ.பி.அர்ஸத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment