எம்.எம்.ஜெஸ்மின்-
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.யின் மடவளை கிளை 16வது தடவையாக ஒழுங்குசெய்திருந்த இரத்ததான நிகழ்வு மடவளை சன் சைன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச வைத்தியசாலைகளில் நிலவும் குருதித் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாமில் குருதிக் கொடையாளிகள் பலர் கலந்து கொண்டு குருதி தானம் செய்தனர்.
இவ் இரத்ததான முகாமில் வை.எம்.எம்.ஏ.யின் தேசிய தலைவர் இன்ஸான் ஹமீட், முன்னாள் தேசிய தலைவர் றிஸ்மி ஸஹீட், மடவளை கிளைத் தலைவர் றிஸாத் லத்தீப்,பொதுச் செயலாளர் ஏ.எம்.ஹஸன் உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment