பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருப்பதையொட்டி சுமார் 220 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டதாக நிவாரண விநியோக ஏற்பாட்டாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.
அரிசி கோதுமை மாவு அடங்கிய தலா 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் ஞாயிற்றுக்கிழமை 10.09.2022 ஏறாவூரில் வழங்கி வைக்கப்பட்டன. இவ்விதம் சுமார் ஒன்பது இலட்ச ரூபாய் பெறுமதியான உலருணவுகள் பகிர்ந்தளிக்கப்பட்டதாக முன்னாள் மாகாண அமைச்சர் சுபைர் தெரிவித்தார்.
அஸிஷா பௌண்டேஷனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொருளாதார நெசருக்கடியினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களில் சன்மார்க்க் கடமை புரியும் இமாம்கள், முஅத்தின்கள், ஆலிம்கள் ஆகியோருக்கு இந்த உலருணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.
ஏறாவூர் முஹைதீன் ஜும்மாப் பள்ளிவாசலில் இடம்பெற்ற இந்த உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் கொடை வள்ளலும் மார்க்க அறிஞரும் அரசியல்வாதியுமான காலஞ்சென்ற ஹஸன் மௌலவியின் ஞாபகார்த்த சொற்பொழிவும் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் கொடை வள்ளல் ஹஸன் மௌலவின் புதல்வன் அஸிஷா பௌண்டேஷனின் பணிப்பாளர் சாதிக் ஹஸன், சமூக செயற்பாட்டாளர் றிஸான் ஹாஜியார், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிநேசாதகர் சரூக், உட்பட ஜம்மிய்யத்துல் உலமா சபைக் கிளை உறுப்பினர்கள் மார்க்க அறிஞர்கள் பள்ளிவாசல்களின் கதீப்மார் பயனாளிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment