மாவட்ட நிலை மெரிட்சாதனை மாணவர்களை கௌரவித்த தம்பிலுவில் தேசிய பாடசாலை


வி.ரி. சகாதேவராஜா-


ண்மையில் வெளியான கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் கணித பாடத்தில் மாவட்டநிலையில் மெரிட்சாதனை படைத்த மாணவர்கள் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில்( தேசிய பாடசாலை) நேற்று கௌரவிக்கப்பட்டார்கள்.

கணித பாடத் துறையில் மூன்று ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் நிலையில் இருக்கின்ற ஆர். கம்ஷயன், மாவட்டத்தில் 5ஆம் நிலையில் இருக்கின்ற குணபாலன் சஞ்சயன் ,மாவட்ட நிலையில் 7ஆம் இடத்தில் இருக்கின்ற ஆர்.அருணியா ஆகிய மூன்று கணிதத்துறை மாணவர்கள் உடன், கலைத்துறையில் மூன்று ஏ சித்தி பெற்ற எஸ். தட்சணா ஆகிய நால்வரும் நேற்று பாடசாலையில் கௌரவிக்கப்பட்டார்கள்.

கணித பாட மாவட்ட நிலை சாதனை மாணவர்கள் மூவரும் மெரிட் சித்தி அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய அதிபர் திருமதி கோமளா பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திருக்கோவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ் ரவீந்திரன் கலந்து சிறப்பித்தார்.

மாவட்ட நிலை சாதனை மாணவர்களின் பெற்றோர் சார்பில் தென் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். குணபாலன் தம்பதியர் உள்ளிட்ட பெற்றோர்களும், கற்பித்த பிரபல இரசாயனவியல் ஆசிரியர் ஜெயகாந்தன்உள்ளிட்ட ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :