நிந்தவூர் பயணிகள் ஓய்வு பஸ்தரிப்பு நிலையத்தை சூழ பற்றைக் காடும் குப்பை கூளங்களும்.


அஸ்ஹர் இப்றாஹிம்-


நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பயணிகள் ஓய்வு பஸ்தரிப்பு நிலையத்தை சூழ புற்களும் பூண்டுகளும் வளர்ந்து பற்றைக் காடாக காட்சியளிப்பதுடன் அருகில் குப்பை கூளங்கள் நிறைந்துள்ளதுடன் துர்நாற்றமும் வீசுகின்றது.

இவ் பயணிகள் ஓய்வு பஸ்தரிப்பு நிலையம் வயலோரத்திற்கு அண்மையில் காணப்படுவதால்

பாம்பு பூச்சிகளின் நடமாட்டமும் அதிகமாகவே காணப்படுகின்றது.

மழையிலும் வெயிலிலும் பஸ் வரும் வரை ஒய்வுக்காக ஒதுங்கும் பயணிகள் பயதினால் பஸ்தரிப்பு நிலையத்திற்கு வெளியிலேயே காத்திருக்கவேண்டியுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்துமாறு பயணிகள் கேட்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :