அஸ்ஹர் இப்றாஹிம்-
கல்முனையிலுள்ளஸாஹிராதேசியக்கல் லூரியில் சாரண மாணவர்களால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மலையேறும் கழகத்தின் கன்னி முயற்சியாக இரண்டு தினங்கள் கொண்ட துணிகர நடைப்பயிற்சி 21 சாரணர்கள் கலந்து கொண்டவர்கள்.
இந்த நடைபயணத்தை கல்லூரியின் அதிபர் எம்.ஐ.ஜாபிர் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதி அதிபர் எம்.எச்.எம்.அபூபக்கர், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம்.அமீர், சாரண பொறுப்பாசிரியர் மேஜர்.கே.எம். தமீம் ஆகியோர் ரகலந்து கொண்டார்கள்.
இந்த துணிகர நடைப்பயணத்தில் சாரணர்கள் இயற்கை சூழலை இரசித்தல், அறிவைச் சேர்த்தல், கடின உள்ளார்ந்த திறன்களை விருத்தி செய்தல், கடின வேலைகளைச் செய்யும் மன உறுதியை விருத்தி செய்து கொள்ளல் போன்ற அனுபவங்களை பெற்று உடற்றகமை விருத்தி பெபெற்றுக்கொள்வதுடன் , சாரணர்கள் இச்செயற்பாடு சம்பந்தமாக ஒரு அறிக்கையும் சமர்ப்பித்தனர்.
மாணவர்கள் பாடசாலைக் காலங்களின் சிறந்த அனுபவத்தை பெற்று ஆளுமை விருத்தியைப் பெற்றுக் கொள்கிறார்கள் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment