கிழக்கு மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு.


அஸ்ஹர் இப்றாஹிம்-


கிழக்கு மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்டப் போட்டியின் அரை இறுதிப் போட்டி அண்மையில் இடம்பெற்றது.

அரை இறுதிப் போட்டியில் கிழக்கின் பலம் பொருந்திய கிண்ணியா மத்திய கல்லூரி அணியும், காத்தான்குடி மத்திய கல்லூரி அணியும் பலப்பரீட்சையில் ஈடுபட்டன.

இரண்டு அணிகளும் எதுவித கோல்களையும் புகுத்தாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவுற்றது.

வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்காக மத்தியஸ்தர்களால் தண்டனை உதை வழங்கப்பட்டது.

இதில் காத்தான்குடி மத்திய கல்லூரி அணி 4:3 என்ற கோல் அடிப்படையில் வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :