ஹஸ்பர்-
திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் புதிய அதிபராக ஏ.ஜெ.எம்.புர்காண் கடமைகளை (04) பொறுப்பேற்றார்.
அகில இலங்கை ரீதியில்
1998 ஆம் ஆண்டு நடை பெற்ற அதிபர் தேர்வு பரீட்ச்சையில் 6000 மேற்பட்ட அதிபர்கள் மத்தியில் முதலாம் இடத்தில் சித்தி அடைந்தவராவார்.
அதிபர் புர்காண் அவர்கள் இதுவரை
கொழும்பு ஹமீத் அல் ஹுசைநியா தேசிய பாடசாலையின் பிரதி அதிபராகவும், பாதுக்கை முஸ்லிம் மகாவித்யாலயத்தின் பிரதி அதிபராகவும், வக தமிழ் மகாவித்யாலயம்,
மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலை, கல் எலிய அலிகார் மத்தியகல்லூரி,
பாணந்துரை அளவியா பாடசாலைகளில் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.
இதே நேரம் மேற்குறிப்பிட்ட பாடசாலைகளின் கல்வி, கலாச்சாரம் மற்றும் விளையாற்றுத்துறை, உள்ளிட்ட பல துறைகளின் முன்னேற்றத்திற்கு அர்பணிப்புடன் சேவையாற்றியதுடன் குறித்த பாடசாலை களின் பௌதீக வல அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கும் தொடர் பங்களிப்பினை வழங்கியவர் என்பதும் விஷேட அம்சமாகும்.
தேசிய கல்வி நிறுவனத்தின் M Ed மற்றும் PGDE, BED விரிவுரையாளராகவும் கடமையாற்றிக் கொண்டிருப்பவர் என்பதும் விஷேட அம்சமாகும்.
2019 ஆண்டு சிறந்த அதிபருக்கான குரு பிரதீபா பிரபா விருதினை அதிபர் AJM Furkhan அவர்களுக்கு கிடைத்ததுதம் விஷேட அம்சமாகும்.
அதிபரவர் அவர்கள் உரையாற்றுகையில்......
ஒரு பாடசாலையின் அதிபர் பதவி வழங்கப்படு தூக்குக் கயிரினை கையில் கொடுப்பதற்கு சமனாகும். இவ்விடத்தில் இருக்கக் கூடிய அதிபர்களுக்கு தெறியும் அவர்கள் படுகின்ற வேதணை.
அதிபர் சேவையில் பல தசாப்த்த கால அணுபவங்கள் இருந்து கிடைத்த அனுபவம் தான் எல்லோரும் எதிர்பார்ப்பார்கள் அவர்களை திறுப்த்திப்படுத்த வேண்டும் என்று.
இதே நேரம் ஏதாவது ஒரு விடயத்தில் சருக்கி விழுந்தாள் முழுப் பொறுப்பும் அதிபரை தான் வந்து சேறும். எங்கோ பாடாசாலை மாணவனால் நடக்கும் அசம்பாவிதத்தின் முழுப் பொறுப்பும் பாடாசாலை அதிபரைத்தான் வந்து சேரும்.
அவ்வாரான சந்தர்ப்பங்களின் போது முதளாவாதாக அந்த மாணவர்களிடம் கேட்பதும் நீர் எந்த பாடசாலை மாணவன் என்று தான் . எனவே பாடசாலை அதிபர் பணி என்பது இளகுவாண விடயம் அல்ல.
ஒரு பாடசாலையின் வெற்றி தங்கி இருப்பது 03 விடயங்களில்.
முதலாவதாக பாடாசாலைன் பெறுபேறு காணப்படுகின்றது அதே போன்று இரண்டாவாதாக பாடசாலையின் ஒழுக்கம் காணப்படுகின்து. இன்று பிரபள்யம் வாய்ந்த பாடசாலை களை பார்த்தாள் அவற்றின் வெற்றிக்கு மிகப்பெறிய பங்களிப்பாக இறுப்பது அந்தப் பாடசாலையின் மாணவர்களின் ஒழுக்கம்தான்.
மூன்றாவது விடயம் பாடசாலையின் தோற்றம். பாடாசாலையில் நுலையும் போது அது பல்கலைக்கழகம் போன்று காட்ச்சி அழிக்க வேண்டும். கல்விச்சூழல் காணப்பட வேண்டும்.
பாடசாலையில் மேற்கூறப்பட்ட 03 விடயங்களும் காணப்பட்டாள் இளகுவாக முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்லலாம்.
அதே போன்று பாடசாலையின் இதயமாக வகுப்பரைகள் காணப்பட வேண்டும். அந்த வகுப்பரையின் செயல் வீரர்களாக ஆசிரியர்கள் திகள வேண்டும். ஆசிரியர்களின் பணிதான் மிகச்சிறந்த பணியாக பார்க்கப்படவேண்டும்.
அதே போல பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் செய்து கொண்டிருப்பது ஊதியமற்ற தொழிலாகும். ஏனென்றால் அவர்களது கால நேரத்தை எல்லாம் ஒதிக்கு விட்டு பாடாசாலையின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிபப்புடுன் செயற்படுகின்றார்கள்.
எனவே தான் 122 வருட வரளாற்றை கொண்ட இந்த பாடசாலையின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், பாடாசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை நன்றியோடு ஞாபகபப் படுத்திக் கொள்கின்றேன்.
பாடாசாலையில் இன்றையதினம் வழங்கப்பட்ட வரவேற்பு இறுதிவரை கிடைக்க வேண்டும். அப்போது தான் பாடசாலையினை முன்னேற்ற பாதையில் இட்டுச்செல்ல முடியும்.
0 comments :
Post a Comment