உலக தற்கொலை தினத்தினை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறப்பு நிகழ்வுகள் !


வி.ரி.சகாதேவராஜா-

லக தற்கொலை தினத்தினை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஒருவார கால சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 11ஆம் திகதி உலக தற்கொலை தினமாகும்.

அதனையொட்டி கல்முனை ஆதார வைத்தியசாலையில்
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா முரளீஸ்வரன் சிறப்பு நிகழ்வுகள் தலைமையில் இடம் பெற்று வருகின்றன.

இந்நிகழ்வில் உளவியலாளர் திருமதி சம்ருத் ஷெரிப்டின் ( Uk), வைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணர் டாக்டர்.ஏஜிஎம். ஜுராச் , வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் ஜே.மதன் மற்றும் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரிகள் ,உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தாதிய பொறுப்பு உத்தியோகத்தர. க. அழகரெட்னத்தின் வரவேற்புரையை தொடர்ந்து வைத்தியசாலையின் பணிப்பாளரினா தலைமை உரை நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து உளவியலாளரின் தற்கொலை தடுப்பு தொடர்பான விரிவுரை மற்றும்,வைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணரின் தற்கொலை தடுப்பு தொடர்பான விளக்ககாட்சிப்படுத்தல் மற்றும் மனநல பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் டாக்டர் யூ.எல். சராப்டீனின் தற்கொலை தடுப்பு தொடர்பான விரிவுரைகள் இடம் பெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :