கால் நடை அறுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு



நிப்றாஸ் மன்சூர்-
ண்ணுவதற்கு ஆகுமான பிராணிகளை அறுப்பது தொடர்பான மார்க்க சட்டவிதிகளும் ஜீவகாருண்யமும் எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு கல்முனை அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் உலமா சபையின் ஏற்பாட்டில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் சனிக்கிழமை (2) நடைபெற்றது.

கல்முனை அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் உலமா சபையின் தலைவர் மெளலவி அல் ஹாஜ் P.M.A. ஜலீல் (பாக்கவி) தலைமையில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்கில் உலமாக்கள்,கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நிர்வாக சபையின் தலைவர் டாக்டர் அல்ஹாஜ் S.M.A. அஸீஸ், சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவை அதிகாரிகள், கல்முனை, சாய்ந்தமருது, நற்பட்டிமுனை, மருதமுனை பிரதேசங்களிலிருந்து வருகைதந்த பிராணிகளை அறுப்பவர்கள் மற்றும் ஆடு, மாடு, கோழி இறைச்சி போன்றவற்ற விற்பனை செய்துவரும் வியாபாரிகள் உற்பட பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இவ்விழிப்புணர்வு கருத்தரங்கின் இறுதி நிகழ்வாக கல்முனை அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் உலமா சபையின் செயலாளர் A.L. நாஸர் மன்பயின் நன்றியுரையும் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :