சகோதர மொழியும் சமத்துவமும்!



லங்கை நாடானது நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஓர் தீவாகும். இந்நாட்டில் தமிழர் சிங்களவர், இஸ்லாமியர் என மூவீன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்களிடையே பல்வேறுபட்ட கலாசார முறைமை வார்த்தை முறைமை காணப்பட்ட போதிலும் இம் மூவின மக்களிடையே பேசப்பட்டு வருகின்ற மொழிப்பிரயோகமானது இரு மொழிகள் ஆகும். அவையாவன தமிழ்மொழி மற்றும் சிங்கள மொழி என்பதாகும். 

தமிழர் தமது தாய்மொழியாக தமிழ் மொழியினையும், சகோதர மொழியாக சிங்கள மொழியினையும் பேசுவதற்குப் பயன்படுத்துகின்றனர். இது போன்றே சிங்களவர் தமது தாய்மொழியாக சிங்கள மொழியினையும் சகோதர மொழியாக தமிழ் மொழியினையும் பேசுவதற்குப் பயன்படுத்துகின்றனர். இவர்களிடையே இஸ்லாமியர் தமக்குரிய மொழியாக தமிழ்மொழியினை 75% ஆனவர் பேசுகின்ற போதிலும் 25% ஆனவர்கள் சிங்கள மொழியினை பேசுகின்றமை நாம் கண்டறிந்த விதத்தில் ஒன்று எனக்கூறலாம். 

இலங்கை நாட்டில் உள்ள இருபத்தைந்து மாவட்டங்களில் ஒன்றான திருகோணமலை மாவட்டத்தினை எடுத்துக் கொண்டால் இம்மாவட்டத்தில் கூடுதலாக தமிழர், இஸ்லாமியர், சிங்களவர் என மூவின மக்களும் ஒரு சேர வாழ்ந்து வருகின்றனர். இங்கு மூவின பால் மக்கள் வாழ்வதனால் இங்கு இரு மொழிகளான தமிழ்மொழி மற்றும் சிங்கள மொழி மிகவும் முக்கியமான இடத்தினைப் பிடிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

திருகோணமலை மாவட்டத்தினைப் பொறுத்த மட்டில் இங்கு நூற்றுக்கு ஜம்பது விகிதமானமக்களே இரண்டு மொழிகளினையும் பேசக்கூடிய ஆற்றல் மிக்கவர்களாக காணப்படுகின்றனர். ஜம்பது விகிதமான மக்கள் இரண்டில் ஒரு மொழியினை மட்டுமே சரளமாகப் பேசக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். அதுவே அவர்களது தமிழ்மொழி ஆகும். 

இவ்வாறு காணப்பட்ட திருகோணமலை மண்ணில் மூவினத்தவரும் இருமொழிகளையும் சரளமாக பேச வேண்டும் என எண்ணி மக்களிடையே ஒற்றுமையையும் சமாதானத்தினையும் கொண்டு வருவதற்கு முன் வந்த அமைப்பு என்றால் அது ''எழுத்தாணி கலைப்பேரவை'' ஆகும். முதற்கண் இதற்கு நான் நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன். ஏனென்றால் இவ் எழுத்தாணி கலைப்பேரவையினால் கற்பிக்கப்படுகின்ற ஊடகவியலாளர்களுக்கான இரண்டாம் மொழிப்பயிற்சி வகுப்பில் நானும் ஓர் மாணவி என்பதனால். 

ஆம் என்னைப் பொறுத்த வரையிலும் நானும் எனது தாய்மொழி ஆகிய தமிழ்மொழியினைத் தவிர சகோதர மொழியினைப்பற்றிய எதுவித அறிவும் இல்லாதவளாகவே காணப்பட்டேன். இக்கற்கை நெறியின் மூலம் தற்போது எனது சகோதர மொழியில் பேசுவதற்கு கற்றுக்கொண்டேன். 

இவ்வாறு சகோதர மொழியினைக் கற்றுக்கொண்ட போதிலும் சகோதர இனத்தவரின் கலாச்சாரம் பற்றிய படிப்பறிவினைத்தவிர அனுபவ அறிவு என்பது இல்லாது காணப்பட்டது. இதனையும் அறிந்து கொண்வதற்கு பேருதவியாக இருந்தததும் ''எழுத்தாணி கலைப் பேரவை'' ஆகும். எவ்வாரெனில் கோசல் கெதரிங் (Social Gathering) என எனது சிங்கள நண்பன் ஒருவரின் வீட்டிற்கு சென்று அன்றைய நாள் ஆறு மணித்தியாலங்கள் அவர்களது குடும்பத்தாருடன் நற்புறவுடன் பழகி அவர்களது உணவு முறை, கலாச்சார முறைமை என அனைத்தும் தெரிந்து கொண்டவளாக நான் எனது வீட்டிற்குச் சென்றேன். இதற்கான முழு ஒத்துழைப்பை வழங்கியமை 'எழுத்தாணி கலைப் பேரவையே' சாரும். 

மற்றுமோர் நிகழ்வாக எக்போசல் விசிட் (Exposal Visit) எனும் தலைப்பின் பெயரில் தமிழ் மற்றும் சிங்கள மொழியினைக் கற்கின்ற மாணவர்களாக இரு மொழி கற்;கையாளர்களினையையும் ஒன்றாக இணைத்து 09.07.2023 ஆம் திகதி அன்று கண்டிக்கு அழைத்துக்சென்றனர். அங்கு செல்லும் போது நாம் சென்ற பேருந்தில் அனைவரும் மிகவும் சந்தோசமாக சென்றோம். நமக்குள் எதுவித மன சஞ்சலங்களும் இன்றி சென்றோம். என்பது குறிப்பிடத்தக்கது. திருகோணமலையில் இருந்து கண்டிக்கு சென்றடைந்த வேளையில் நாம் அங்கு சில ஊடகவியலாளர்களினை சந்தித்தோம். அவர்கள் எமது வருகைக்காகவும், ஊடகத்துறையில் தமக்கான அனுபவங்களினை எம்முடன் பகிர்ந்து கொள்வதற்காகவும் காத்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

 அங்கு காணப்பட்ட ஊடகவியலாளர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பத்திரிக்கைகளின் ஆசிரியர்களாகக் காணப்பட்டனர். அவர்களும் தாங்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகளில் ஒன்று மொழியாகவே காணப்பட்டது. ஆனபோதிலும் தாங்கள் பல இடங்களிற்குச் சென்றதனால் அதனை தம்மால் இலகுவாகக் கற்றுக்கொள்ள முடிந்தது எனவும் மொழியினைக் கற்றுக்கொள்வதற்கு கஸ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தனர். மொழியினைக் கற்றுக்கொள்வதில் ஒவ்வொருவருக்கும் இடையிலான அனுபவங்கள் வௌ;வேறானதாகக் காணப்பட்ட போதிலும் அவர்களது குறிக்கோள் ஒன்றாகக் காணப்பட்டது. அது யாதெனில் 'இரண்டாம் மொழியினை நாமும் கற்றுக்கொள்ள வேண்டும்' என்பதாகும். 

அவர்களுடனான அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்ட விடயம் என்னவென்றால் 'ஓர் மொழியை நாம் கற்றுக்கொள்வதற்கு அம் மொழியை நாம் முதில் காதலிக்க வேண்டும்' என்பதாகும். இரண்டாம் மொழியிலும் இரண்டாம் மொழியினை பேசுகின்ற சகோதர மொழி இனத்தவரிடமும் அன்பும் ஆதரவும் காட்டும் பட்சத்தில் இரண்டாம் மொழியினை இலகுவாக கற்றுக் கொள்ள முடியும் என்பது எனது கருத்தாகும். 

இவ்வாறான நடவடிக்கைகளினை முன்னெடுத்துச்சென்ற அமைப்பான எழுத்தாணி கலைப்பேரவைக்கு அதற்கு உருதுணையாக நின்ற விரித்தி அமைப்பிற்கும் சிங்கள மொழி கற்கை நெறியின் மாணவியாக நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன். என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இக்கற்கை நெறியில் சிங்கள மொழி மூலமான கற்றை நெறிக்கு இருபத்தைந்து தமிழ் மொழியிலான ஊடகவியலாளர்களும், தமிழ் மொழி மூலமான கற்கை நெறிக்கு இருப்பதைந்து சிங்கள மொழியிலான ஊடகவியலாளர்களுமாக ஜம்பது பேர் கற்கின்றனர். இவ் ஜம்பது பேரும் ஆரம்பத்தில் இரு மொழிகளும் சரளமாக எழுதுவதற்கும், வாசிப்பதற்கும், பேசுவதற்கும் தெரியாதவர்களாக காணப்பட்ட போதிலும் தற்போது இம் மூன்றையும் இரு மொழிகளில் முன்னெடுத்துச்செல்வதற்களாக முழு ஆற்றல்களினையும் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இவர்கள் இடத்தில் இருமொழியினையும் எழுதுவதற்கு, வாசிப்பதற்கு, பேசுவதற்கான திறமை இருந்த போதிலும் அதனை வெளிக்கொணர்வதற்கான எதுவித சந்தர்ப்பங்களும் கிடைக்கப்பெறாதவர்களாகக் காணப்பட்டனர். இவர்களது இரு மொழிகளினையும் பேசக்கூடிய திறமையினை வெளிக்கொணர்வதற்கு 'எழுத்தாணி கலைப்பேரவையினால் எடுக்கப்பட்ட முயற்சிகளில் ஒன்று' 'ஊடகவியலாளர்களுக்கான இரண்டாம் மொழி கற்கை நெறி' ஆகும். இதன் மூலம் இக்கற்கை நெறியில் கலந்து கொண்ட ஜம்பது மாணவர்களுமே நூறு சதவீதம் பயன்பெற்றுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாணவர்களில் நானும் ஒருவர் எனும் வகையில் பெருமை கொள்கின்றேன். 

மேலும் இவ் 'எழுத்தாணி கலைப்பேரவையினால்' இது போன்ற பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் இதன் மூலம் நாம் மட்;டுமல்லாது ஏனையவர்களும் பயன் பெற வேண்டும் எனக்கூறுவதுடன் இப்பேரவையின் முயற்சிகள் தொடரவும் வெற்றி பெறவும் இறையருள் கொண்டு வாழ்த்துக்களினையும், நன்றிகளினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஆக்கம்  - விகாசனா இராமேஸ்வரன்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :