எவரெடி கழகத்துக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்.



நூருல் ஹுதா உமர்-
ருதமுனை மனாரியன் 88 அமைப்பின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் "மருதமுனை இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கு உதவுவோம்" எனும் நோக்குடன் மருதமுனையிலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்ற நிகழ்வு மனாரியன் 88 அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் ஐ.எல். முக்த்தார் அவர்களினால் முன்னெடுக்கப்படுகின்றன.

இது தொடர்பாக மருதமுனை எவரெடி விளையாட்டுக் கழகத்துடனான கலந்துரையாடல் பர்வின் ரெடிங் மற்றும் லதான் அக்ரோ இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களின் நிறைவேற்று பணிப்பாளர் கலீல் முஸ்தபா அவர்களுடன் மருதமுனை பிரதான வீதி முஸ்தபா காம்ப்லெஸ் நிறுவனக் காரியாலயத்தில் 21.09.2023 இடம்பெற்றது.

இதன் போது மருதமுனை எவரெடி விளையாட்டுக்கழக கட்டமைப்பு, முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் என்பன போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன.

மேலும், இந்நிகழ்வில் எவரெடி விளையாட்டுக்கழக வளர்ச்சிக்கு உதவும் நோக்குடன் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை எவரெடி விளையாட்டுக் கழகத்துக்கு வழங்கி உதவிய தொழிலதிபர் கலீல் முஸ்தபா மற்றும் மனாரியன் 88 பிரதான செயற்பாட்டாளர் ஐ.எல்.முக்தார் ஆகியோருக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் எவரடி விளையாட்டு கழக செயலாளர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :