சகோதர மொழி கற்கைநெறி



திருகோணமலையில் வாழும் மக்கள் இரு மொழிகளினைப் பேசுகின்ற மூவின மக்கள் ஆவர். இங்கு தமிழர் இஸ்லாமியர் சிங்களவர் என மூவின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களால் பேசப்படுகின்ற மொழிகள் தமிழ் மற்றும் சிங்கள மொழி ஆகும். இங்கு நூற்றுக்கு ஜம்பது விகிதமான மக்களே இரு மொழிகளினையும் பேசக்கூடியவர்களாக காணப்படுகின்றனர்.

திருகோணமலை மண்ணில் வாழுகின்ற மக்கள் தமக்கிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தினையும் பரஸ்பரமாகக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். ஆனபோதிலும் இவர்களிடையே உள்ள உறவினை மேலும் பலப்படுத்துவதற்கு மொழி என்பது பிரதான பாலமாகக் காணப்படுகின்றது. மொழியினைப்பொறுத்த மட்டில் தமிழ்மொழி பேசுகின்ற ஒருவரால் சகோதர மொழியினைப் பேசுவதற்கு இயலாதவிடத்து கருத்து முரண்பாடுகளும், மனக்கஸ்டங்களும் ஏற்படுகின்றன. ஆகவே திருகோணமலையினைப் பொறுத்த வரையில் இரு மொழிகளினையும் ஓர் மனிதன் கற்றுக்கொள்வது என்பது அவசியமானதாகும்.

திருகோணமலை மட்டுமல்லாது இலங்கை எனும் நாட்டில் வாழ்வதற்கு மொழி என்பது பிரதான பங்கினை வகிக்கின்றது. ஏனெனில் சில மாவட்டங்களில் சகோதர மொழியினை மட்டும் பேசக்கூடிய மனிதர்கள் காணப்படுகின்றனர். அவர்களுடன் பேசிக்கொள்வதற்கு அவர்களது மொழியினை நாம் கற்று கொள்வது மிகவும் அவசியமாகும்.

இலங்கையினைப் பொறுத்தமட்டில் இரு மொழிகளினை நாம் தெரிந்து வைத்திருக்கும் பட்சத்தில் இன முரண்பாடுகளினை நாம் தவிர்த்துக்கொள்ள முடிகின்றது. இவ்வாறான மொழியின் மூலம் ஏற்படுகின்ற முரண்பாடுகளினை தவிர்த்து சமாதானத்தினையும், நல்லிணக்கத்தினையும் மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளில் ஒன்றாக 'எழுத்தாணி கலைப் பேரவையினால்' முன்னெடுக்கப்பட்ட 'ஊடகவியலாளர்களுக்கான சிங்கள மற்றும் தமிழ் மொழி கற்றல் செயற்பாடாகும். திருகோணமலை மண்ணில் வாழ்கின்ற மக்கள் இருமொழிகளினையும் கற்று இனமுரண்பாடுகளினைத் தவிர்த்து நல்வழியில் சமாதானத்துடன் வாழ்வதற்கான செயற்பாடாகும்.

இவ் இருமொழி கற்கையின் மூலம் பலர் பயன் பெற்றுள்ளனர். இதில் தமிழ் மற்றும் சிங்கள இனத்து ஊடகவியலாளர்கள் பலர் பங்கு பற்றி இதில் முழு பயனையும் அடைந்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அனைவரும் இருமொழிகளினையும் சரளமாக எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் பேசுவதற்கும் கற்றுக் கொண்டவர்களாகக் காணப்பட்டனர்.

மேலும் இவ்வகுப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட மேலுமொரு செயற்பாடாக அமைவது சோசல் கெதரிங் (Social Gathering) செயற்பாடாகும். இதன் மூலம் தமிழ் வகுப்பு மாணவர் சிங்கள சகோதரனின் வீட்டிற்குச் சென்று அவர்களுடன் பேசிப்பழகி அவர்களது கலை கலாச்சாரங்கள் பற்றிய பூரண அறிவுடன் வெளிவருவதற்காக ஒரு நாள் ஒதுக்கப்பட்டது. அது போன்று சிங்கள வகுப்பு மாணவர் தமிழ் சகோரதரரின் வீட்டிற்குச் சென்று அவர்களது கலை கலாச்சாரங்கள் பற்றிய பூரண அறிவுடன் வெளிவருவதற்கு வழிவகுத்து இதன் மூலம் ஒவ்வொருவரும் தமக்குரிய பிரதிபலன்களை பூரணமாகப்பெற்றுக் கொண்டவர்களாக வெளிவந்தனர்.

அடுத்த நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடாக அமைந்தது. பல ஊடகவியலாளர்களை சந்தித்து அவர்களது அனுபவங்களினை எம்முடன் பகிர்ந்து கொள்கின்ற செயற்பாடாகும். இதனை எக்போசல் விசிட் (Exposal Visit) எனும் தலைப்பின் பெயரில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடாகும். இச் செயற்பாடானது கண்டியில் இடம்பெற்றது. இதில் கலந்து பங்குபற்றிய ஊடகவியலாளர்கள் தமது பல கருத்துக்களினையும் அவர்களது அனுபவங்களினையும் எம்முடன் பகிர்ந்து கொண்டனர். இதன் மூலம் அவர்கள் இருமொழியினையும் கற்றுக்கொள்வதற்கு தாங்கள் எவ்வாறான நடவடிக்கைகளினை மேற்கொண்டனர். என்பது பற்றியும் இரு மொழிகளினையும் தாம் கற்றதன் பின்னர் சகோதர மொழி பேசுகின்ற சகோதரருடன் தாம் எவ்வாறு தயக்கமின்றி பேசிப்பழகி வருகின்றனர். என்பதனைப் பற்றியும் பகிர்ந்து கொண்டனர்.

இதன் மூலம் நாம் பெற்றுக்கொண்ட படிப்பினையாக அமைவது இரு மொழிகளினையும் நாம் கற்றுக்கொள்வதன் மூலம் சமூகத்தில் இன நல்லிணக்கத்தினை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதாகும். மொழி என்பது மனிதனின் பல்வேறுபட்ட விடயங்களில் சம்மந்தப்பட்டதாக காணப்படுகின்றது. அதிலும் ஊடகவியலாளர்களினைப் பொறுத்தமட்டில் இரு மொழிப்பிரயோகம் என்பது மிகவும் அவசியமானதாகக் காணப்படுகின்றது. ஊடகவியலாளர்களினைப் பொறுத்த வரையில் அவர்கள் எந்நேரத்திலும், எந்த இடத்திலும் செய்திகளினைத் திரட்டக்கூடிய வல்லமை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் சகோதர இனத்தவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று செய்தி சேகரிப்பதற்கு அவர்களுக்கு சகோதர மொழி அவசியம் தெரிந்திருந்தல் வேண்டும். அத்துடன் பொதுமக்கள் ஆகிய அனைவரும் அத்தியாவசிய தேவைகள், அடிப்படைத்தேவைகள், ஆடம்பரத்தேவைகள் எனப் பல்வகைப்பட்ட தேவைகளினை உடையவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களது தேவைகள் ஒவ்வொன்றினையும் நிறைவேற்றிக்கொள்வதற்கு மொழி இன்றியமையாததாகும்.

ஆகவே திருகோணமலை மண்ணில் மட்டுமல்லாது ஏனைய அனைத்து இடங்களிலும் மொழியின் தேவையானது இன்றியமையாததாக காணப்படுகின்றது. ஆனபடியால் இலங்கையில் வாழுகின்ற ஒவ்வொரு பிரஜைகளும் இருமொழிகளினையும் கற்று வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும்.

ஆகவே தான் இலங்கை அரசானது இரண்டாம் மொழியின் முக்கியத்துவத்தினை கவனத்திற்கொண்டு இரண்டாம் மொழி கற்றலினை கட்டாயமாக்கியுள்ளது.

ஆகவே இலங்கையில் உள்ள ஒவ்வொரு இனத்தவர்களும் இரு மொழிகளினையும் கற்பதன் மூலம் சமாதானத்தினையும், நல்லினக்கத்தினையும் மேம்படுத்தி ஒற்றுமையுடன் வாழ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்கம் - சகானா கோபால்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :