எம்.எஸ்.எம்.ஸாகிர்-
நீதி அமைச்சின் கீழுள்ள தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினால், ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சமாதான தின நிகழ்வு கொழும்பு மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (22) நடைபெற்றது.
இலங்கை சர்வமத தலைவர்கள் மற்றும் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, இலங்கை பாராளுமன்ற நல்லிணக்கக் குழுவின் தலைவர் டிலான் பெரேரா எம்.பி, அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே சுனாங், நீதி அமைச்சின் செயலாளர் திருமதி வசந்த பெரேரா, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவர் ஜே.ஜே. ரத்னசிறி (ONUR), நல்லிணக்க அலுவலகத்தின் பணிப்பாளர் தீப்தி லமாஹேவா மற்றும் கௌரவ அதிதிகள், தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இந்த தேசத்தின் உற்சாகமான எதிர்கால சந்ததியினர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே சுன்ங்கின் உரையாற்றும் போது,
சர்வதேச சமாதான தினத்தை உலகம் கொண்டாடி ஒரு நாளுக்குப் பிறகு, இன்று நாம் கூடும் போது, அமைதியைக் கருத்தாகக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், அதைச் செயற்படுத்துவதற்கு நமக்கு நாமே சவால் விடுவோம்.
குறிப்பாக இலங்கையின் 75ஆவது சுதந்திரம் மற்றும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் - வளர்ச்சி, சவால்கள் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் பகிரப்பட்ட பயணத்தை நினைவுகூரும் வேளையில், சிந்திக்கவும் செயற்படவும் இது ஒரு சிறந்த தருணமாகும் என்றும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment