மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிய ஸ்தலத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்.


எம்.எம்.றம்ஸீன் -

ம்பாறை மாவட்டம், ஒலுவில் அஷ்ரஃப் நகருக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் விஜயம் செய்து மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்.

அஷ்ரஃப் நகர் ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் ஊர்ப்பிரமுகர்கள் கலந்து கொண்டு தமது பிரச்சினைகளை முன்வைத்தனர்.

இதன்போது, அஷ்ரஃப் நகரில் நீண்ட காலமாக பிரச்சினையாக இருக்கும் யானை-மனித மோதலை தடுக்கும் முகமாக யானை வேலி அமைப்பதற்காக குறித்த அமைச்சரை சந்தித்து தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் உறுதியளித்தார்.

இதுவரை காலமும் மையவாடிக்கான திட்டமிடப்பட்ட நிலம் அஷ்ரஃப் நகரில் இல்லை என்ற பிரச்சினை முன்வைக்கப்பட்ட போது, உடனடியாக பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு அதற்கான உரிய நிலத்தை ஒதுக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

அங்கு வைத்தியசாலை இல்லாது மக்கள் அல்லல் படுவதாகவும், வைத்தியசாலை தேவைக்காக தூரப்பரதேசத்திற்கு செல்லும் தேவை இருப்பதாகவும் முன்வைக்கப்பட்ட போது, அங்கு ஒரு பிரதேச வைத்தியசாலை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது குறித்து சுகாதார அமைச்சோடு பேசுவதாகவும் அதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

இவ்விஜயத்தின் போது, அஷ்ரஃப் நகர் அக்ஸா பாடசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜயம் செய்து அங்கு பாடசாலை பாதுகாப்புக்கான சுற்றுமதில் இல்லை என்று பாடசாலை அதிபர் முன்வைத்த போது, எதிர்வரும் பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் அச்சுற்றுமதிலை அமைத்து தருவதாகவும், அப்பாடசாலையை எதிர்காலத்தில் தரமுயர்த்தி தருவதற்கான பணிகளையும் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார்.

பாராளுமன்ற உறுப்பினரின் ஒலுவில் பிரதேச இணைப்பாளர் எம்.ஜே.எம். அஷ்ஹரின் வழிகாட்டலில் இடம்பெற்ற இவ்விஜயத்தில், அஷ்ரப் நகர் ஜூம்ஆ பள்ளி தலைவர் யூ.எல். சம்சுதீன் அவர்கள் சந்திப்புக்கு தலைமை வகித்ததோடு, பாராளுமன்ற உறுப்பினரோடு, பாராளுமன்ற உறுப்பினரின் பாலமுனை பிரதேச இணைப்பாளர் ஹூசைர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஸி.எம். ஸஹீல், ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ்.முபாறக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :