வி.ரி. சகாதேவராஜா-
சிறுவர் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்குறைப்பு மற்றும் உளவளத்துணை தொடர்பான கூட்டம்
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னத்தின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் ப பெற்ற நிகழ்வில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்கள் பகிரப்பட்டதுடன், எதிர்காலத்தில் மேற்கொள்ள எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
குறிப்பாக
சிறுவர் இடைவிலகலை கட்டுப்படுத்தல்.
சிறுவர் பாதுகாப்பு மிகுந்த நிலையான குடும்பச் சூழலை உருவாக்குதல்.சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் தராதரங்களை கண்காணித்தல்.
பல்துறை சார்ந்த ஒருங்கிணைப்புகளை பலப்படுத்தல்
பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான சட்ட ரீதியான பாதுகாப்பை பெற்றுக் கொடுத்தல்
குடும்ப வன்முறைகளை குறைப்பது தொடர்பில் கையாளப்பட வேண்டிய விடயங்கள்
உளநல பாதிப்புற்றோர் தொடர்பில் கையாள வேண்டிய நடவடிக்கைகள்
என பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இவ் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன் மற்றும் வலயக் கல்வி அலுவலகம், பொலிஸ் திணைக்களம், சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் உட்பட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் முகாமையாளர்கள்,
கிராம சேவை உத்தியோத்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏனைய துறை சார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment