நிந்தவூரில் வைத்திய துறைக்கு தெரிவாகி சாதனை படைத்த முதல் தமிழ் மாணவி ஜனுசிகா.


வி.ரி.சகாதேவராஜா-

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி, அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பகுதியில் இருந்து முதன் முறையாக தமிழ் மாணவி ஒருவர் வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

நிந்தவூரைச் சேர்ந்த குணசேகரம் ஜனுசிகா என்ற மாணவியே இவ்விதம் மூன்று ஏ சித்திகளைப் பெற்று கன்னிச் சாதனை புரிந்தவராவார்.

நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் உயிரியல் பிரிவில் கல்வி கற்ற மாணவியான குணசேகரம் ஜனுசிகா என்ற மாணவியே இவ்வாறு சிறந்த பெறுபேற்றினைப் பெற்று சாதனை படைத்துள்ளார் .

குறித்த பகுதியில் இருந்து வைத்தியத் துறைக்கு செல்லும் முதலாவது தமிழ் மாணவியாக இவர் அடையாளப்படுத்தப்படுகின்றார்.

இவரைப் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :