மேயர் பதவியிலிருந்து விலகுமாறு நாங்கள் கோரிய போது மிகவும் கண்ணியமாக தனது ராஜனமாவைச் செய்தவர் கலாநிதி சிராஸ் மீராசாஹீப்.-ரவூப் ஹக்கீம்



எம்.எப்.றிபாஸ்-
மேயர் பதவியிலிருந்து விலகுமாறு நாங்கள் கோரிய போது மிகவும் கண்ணியமாக தனது ராஜனமாவைச் செய்தவர் கலாநிதி சிராஸ் மீராசாஹீப் ஆவார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஸ்றப் அவர்களது சிராத்த தினத்தை சாய்ந்தமருதில் நடத்துவது தொடர்பாக நடைபெற்ற எழுச்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.முன்னாள் கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹீப் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்.

ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சி அழிந்து போய்விட்டது என்று சொல்பவர்கள் மத்தியில் இந்தக் கூட்டம் சொல்லும் செய்தி கட்சியின் எழுச்சியையும் வீரியத்தையும் என நான் நினைக்கிறேன்.கலாநிதி சிராஸ் மீராசாஹீப் மெட்ரோ பொலிடன் கல்லூரியினுடைய பட்டமளிப்பு விழாவை நடத்துவதை நான் அவதானித்திருக்கிறேன் அதனை அவர் பெரும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களை விடவும் தேர்த்தியாகவும், ஒழுங்கு முறையாகவும் நடத்துவார். அவர் தனக்கு வழங்கப்பட்ட பணியை தேர்த்தியாக செய்வார் என்பது நாம் மேயர் பதவி வழங்கியதிலிருந்து அறிந்த விடயம்.கட்சியிலிருந்து விலகிச் சென்று இன்று மீண்டும் இணைந்துள்ள இருவர் மூலமாக கட்சி பெரும் உற்சாகமடைந்திருக்கிறது அவர்கள் கலாநிதிகளான எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ், சிராஸ் மீராசாஹீப் ஆவார்கள்.அவர்கள் இருவரும் இந்தக் கட்சியில் மிகப்பெரும் மக்கள் செல்வாக்கைக் கொண்டவர்கள்.

செப்டம்பர் 16 மறைந்த பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஸ்றப் அவர்களை இழந்த நாள் அவரது மறைவின் சோகம் இன்னும் எங்களை தொடர்ந்தும் பாதித்துக்கொண்டியிருக்கிறது.அவருடைய நினைவு தினத்தை கட்சியின் புதிய யுகத்திற்கான ஆரம்பமாக மாற்றி கொள்ள வேண்டும் என்பது கட்சி முக்கியஸ்தர்களது பலரது விருப்பமாகும்.

அதற்கமைய சில இடங்களில் கட்சிக்கு தொய்வுநிலை ஏற்பட்டிருக்கின்ற நிலமையை உறுதிநிலைக்கு கொண்டு வருவதற்கு இந்த ஞாபகார்த்த நிகழ்வை பயன்படுத்த உத்தேசித்துள்ளோம்.தற்போது ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓர் அணியாக ஒற்றுமையாகயிருப்பது கட்சிக்கு பெரும் உத்வேகத்தை உருவாக்கியிருக்கின்றது என்றார்.

இந்நிகழ்வில் கலாநிதி சிராஸ் மீராசாஹீப் உரையாற்றுகையில் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்றப் அவர்களுடைய நினைவேந்தல் விழாவை சாய்ந்தமருது மண்ணில் நடாத்துவதற்கு அனுமதியளித்து அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கிய கட்சி தலைமைக்கும் உயர் பீடத்திற்கும் நான் நன்றியை தெரிவிக்கிறேன்.

கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையில் சாய்ந்தமருது சார்பாக கட்சிக்கு 90 வீதமான வாக்குகளை நாம் பெற்றுக் கொடுத்திருந்தோம் அதே போன்ற ஒரு எழுச்சியை மீண்டும் இந்த மண்ணில் தலைவரது நினைவேந்தல் நிகழ்வு மூலமாக சாதித்துக்காட்ட இருக்கிறோம்.இந்தக் கட்சியிலிருந்து தூரமாகியிருக்கும் கட்சித்தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் இந்தப்பிரதேசத்தில் மீண்டும் ஒன்றினைத்து புதிய உற்சாகத்துடன் செயற்பட நாங்கள் தயாராகவிருக்கிறோம் இந்த ஒற்றுமையை இப் பிரதேசத்தில் ஏற்படுத்துவதற்காக நாங்கள் எதையும் விட்டுக்கொடுக்க தயங்க மாட்டோம்.

பதவி, பட்டங்கள் இறைவன் நாட்டத்தால் கிடைப்பவை இவற்றுக்காக நாங்கள் அரசியல் செய்ய வரவில்லை ,சமூகத்தின் விடிவுக்காக ,மக்களின் முன்னேற்றத்திற்காக செயற்படக்கூடிய கட்சியை உருவாக்கவும், வளர்க்கவுமே நாங்கள் இந்த அரசியலில் இணைந்திருக்கிறோம்.

இந்த வகையில் ஒரு பெரும் விழாவாக இந்த சிரார்த்த தினத்தை நிகழ்த்தி காட்டுவதோடு சாய்ந்தமருது மக்களின் ஒற்றுமையை மீண்டும் உலகறிய செய்வதற்கு சாய்ந்தமருது மக்கள் என்னோடு பூரண ஒத்துழைப்பு தருவதுடன்,விழா ஏற்பாடுகளிலும் பங்கெடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் தவிசாளர் அப்துல் மஜீத், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் ஹாசீம்,எம்.எஸ்.தொளபீக், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ், எம்.ஐ.எம்.மன்சூர், முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை உட்பட அரசியல் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :