தென்கிழக்கு பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைப்பு!


சர்ஜுன் லாபீர்-

திர்வரும் ஒக்டோபர் 24ம் திகதி மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டும், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் தினத்தினை முன்னிட்டும் எதிர்வரும் ஒக்டோபர் 24,25ம் திகதிகளில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ.ரமீஸ் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் 2004/2005 கலைப்பீட மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு இன்று(30) பல்கலைக்கழக ஆற்றங்கரை முன்றலில் நடைபெற்ற போது அந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

அன்றைய தினம் சகல பீடங்களிலும் கல்விசார் நடவடிக்கைகள் மற்றும் கண்காட்சிகள் என பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடைபெறும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் நிகழ்வானது வரலாற்றில் முதல் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு ஸ்தாபகர் தினத்தினை முன்னிட்டு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் உள்ளடக்கிய ஒரு அமைப்பினையும் உருவாக்க இருப்பதாவும் தெரிவித்து இருந்தார்.

இந் நிகழ்வில் கலை கலாச்சார பீடாதிபதி பேராசிரியர் எம்.பாஸீல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :