கல்முனை - பாண்டிருப்பில், சென்ற சனிக்கிழமை நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய கூட்டமைப்பு எம்பி. கலையரசன் - தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உரையாற்றி இருந்தார்.
இவரின் இந்த கருத்துக்கு கடும் தொணியில் பதிலளித்துள்ள யஹியாகான் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ,
தேர்தலுக்காகவும் - மீண்டும் தேசியப் பட்டியல் மூலமாக எம்பி பதவியை பெறுவதற்காகவும் சமுகங்களை பிரித்தாளும் கைங்கரியத்தை கலையரசன் போன்றோர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் வெற்றி பெறப் போவதுமில்லை , தேசியப் பட்டியல் கிடைக்கப் போவதுமில்லை என்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதற்காக - தமிழ், முஸ்லிம் சமுகங்களை கூறுபோட எடுக்கும் முயற்சிகள் கண்டனத்துக்குரியது.
தமிழ் மக்கள் அல்லது தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக / ஒன்றுபட்டு இல்லை என்பது உங்களைப் போன்றோரின் செயற்பாடுகளே அதற்குக் காரணமாக அமைந்திருந்தது.
முஸ்லிம் சமுகத்துக்கு பெரும் அநியாயங்களை செய்தது - உங்களைப் போன்றோரின் இவ்வாறான கடந்தகால இனவாத கருத்துக்கள்தான். நாங்கள் ஒருபோதும் , தமிழ் சமுகம் வேதனைப்படும் வகையில் எங்கும் எப்போதும் கருத்துக்களை பிரதிபலித்தது கிடையாது.
இனப்பிரச்சினை தீர்வின் போது - நியாயமான தீர்வு தமிழ் சமுகத்துக்கு கிடைக்க வேண்டும் என்றே அன்றும் இன்றும் வலியுறுத்தி வருகின்றோம்.
ஆனால், அவ்வாறான நியாயமான தீர்வில் - முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படக் கூடாது என்று எங்கேயாவது ஓரிடத்தில் நீங்கள் கூறியிருக்கிறீர்களா ? இல்லை. ஒருபோதும் இல்லை.
அற்ப அரசியலுக்காக இன்னும் இன்னும் இரு சமுகங்களையும் பகடைக்காயாக பயன்படுத்த உங்களைப் போன்ற - மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் முயல்வது ஆரோக்கியமான விடயமல்ல என்றும் யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment