அஸ்ஹர் இப்றாஹிம்-
கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரியிலிருந்து 2024 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள தொழிநுட்பப் பீட மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல் கல்லூரி கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் அவர்களின் ஆலோசனையின் பேரில் தொழிநுட்பப் பீட பகுதித்தலைவர் இஸட்.ஏ. ஜின்னா அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தைப், பாடவிதான மேம்பாட்டுக்குப் பொறுப்பான பிரதி அதிபர் எம்.எச்.அமீன் அவர்கள் தலைமை தாங்கினார்.
பழைய மாணவர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி சங்கத்தின் செயலாளர் அவர்களும் கலந்து கொண்டிருந்த இக்கூட்டத்தில், பகுதியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, அண்மையில் இடம்பெற்ற முதலாம் தவணைப் பரீட்சையில் மாணவர்கள் பெற்ற பெறுபேறுகள் விரிவாக ஆராயப்பட்டதுடன், அடுத்த தவணைகளில் பெறுபேறுகளை மேம்படுத்துவது தொடர்பிலும், உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழக நுழைவினை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக பெற்றோர் பாடசாலையுடன் தொடர்புற வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதோடு, மாணவர்கள் இரவு வேளைகளில் கல்லூரிக்கு வந்து சுய கற்றலிலும், செயன்முறைகளிலும் ஈடுபடுவதற்கான சூழல் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பிலும், அதில் பெற்றோரின் வகிபாகம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
இம்முறை வெளியிடப்பட்ட க.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் கல்லூரியின் தொழில்நுட்ப பீட மாணவரோருவர் அம்பாறை மாவட்டத்தில் முதலாம் நிலையை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment