முஸ்லிங்கள் தலைவர் அஷ்ரப் தேடிய அமைதியான ஒற்றுமை மிகுந்த அரசியலைத் தொடரவேண்டிய நேரத்தில் உள்ளனர் : ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினர் கலீலுர் ரஹ்மான்



நூருல் ஹுதா உமர்-
றைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம் இளைஞர்களை ஒன்று திரட்டினார். இன்று, அவரது தத்துவத்தை முன்னெடுத்துச் செல்வதாகக் கூறும் சொல்லாட்சித் தலைவர்கள் காட்டிய தவறான முன்னுதாரணங்களால் முஸ்லிம் இளைஞர்கள் வழிதவறி முஸ்லிம் சமூகத்தின் மீது கரும்புள்ளியை ஏற்படுத்தும் விதமாக செயற்படுகிறார்கள். இதிலிருந்து விடுபட்டு முஸ்லிம் சமூகம் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இறுதி நேரத்தில் தேடிய அமைதியான ஒற்றுமை மிகுந்த அரசியலைத் தொடரவேண்டிய நேரத்தில் உள்ளது என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் நினைவேந்தலை அடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், இலங்கையர்களாகிய நாம் 1948ல் சுதந்திரம் பெற்ற போது தமிழ்த் தலைவர்கள் 50/50 என்று தமது இன நிலைப்பாட்டை வெளியிட்ட போது சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ முஸ்லிங்கள் தயாராக உள்ளதாக எங்கள் அரசியல் தலைவர்களான டி.பி.ஜாயா போன்ற தலைவர்கள் சொன்னார்கள். அதே அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை புலி பயங்கரவாதிகளுடன் இணைந்து அல்லது அவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தாமல் பாதுகாத்து முஸ்லிம் மண்ணின் மைந்தர்களைப் பெற்று, வடக்கு கிழக்கைப் பாதுகாத்து, இலங்கைத் தாயின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை ஒன்றிணைத்தார்.

அதனால், ஆத்திரமடைந்த புலிகள் 24 மணி நேரத்திற்குள் முஸ்லிம்களை வடக்கிலிருந்து விரட்டியடித்தனர். மேலும் கிழக்கில் ஏறாவூர், காத்தான்குடி, மூதூர், கிண்ணியா, பொலனறுவை, அலஞ்சிப்பட்டானை போன்ற பல்வேறு பகுதிகளில் நிராயுதபாணியான முஸ்லிம்கள் வெட்டி வீழ்த்தப்பட்டனர். வாழைச்சேனை பிரதேசத்தில் முஸ்லிம் ஜனாஸாவை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தனர். உள்ளூர் முஸ்லிம் அரசியல் தலைவர்களை சுட்டு கொன்றனர். கல்முனையில் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் வீட்டிற்கு தீ வைத்து கொழும்பிற்கு விரட்டியடித்தனர்.

புலிகளின் கொடுமைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த தலைவர் அஸ்ரப் முஸ்லிம் இளைஞர்களை ஜனநாயக வழியில் வழிகாட்டும் விதமாக அரசியல் மயப்படுத்தினார். அதன் ஒரு அங்கமாகவே தான் வெளியிட்ட நான் எனும் நீ கவிதை தொகுப்பில் "இந்தப் போரில் தலைவன் இறந்தாலும் சீக்கிரம் இறந்துவிடுவேன், நீங்கள் பிளவுபடாமல் இந்த அரசியல் போரைத் தொடருங்கள்" என்ற பொருட்பட முக்கிய பல வரிகளை இணைத்துள்ளார். அவர் எண்ணிய விதமாகவே ஹெலிகாப்டர் விபத்தில் 2000 செப்டம்பர் 16 அன்று உயிரிழந்தார். அந்த ஹெலிகாப்டரில் அவருடன் பயணித்த தமிழ் சகோதரர் கதிர்காமர் தம்பிப் பிள்ளையின் குடும்பத்திற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனால் “மகா விரு குடும்பம்” விருது வழங்கப்பட்டது.

தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் முஸ்லிம் அரசியல் வியாபாரமாக மாறியது. அவரது பாசறையில் பயின்ற அரசியல்வாதிகள் பல குழுக்களாகப் பிரிந்தனர். முஸ்லிம் சமூங்கத்தின் அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பு சீரழித்தமையே சஹரான் போன்ற புல்லுருவிகளுக்கு முஸ்லிங்களை பலியிட சாதகமாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :