அகில இலங்கை கணித ஒலிம்பியாட் போட்டியில் வட மாகாண கனிஷ்ட பிரிவு அணி பிரகாசிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-

கில இலங்கை கணித ஒலிம்பியாட் போட்டியில் வட மாகாண கனிஷ்ட பிரிவு அணி இரண்டாமிடத்தை பெற்றுள்ளது.

மீபேயில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் 9 பேரைக்கொண்ட மாணவர் அணியில் மன்னார் புனித சேவியர் ஆண்கள் கல்லூரி மாணவன் ஏ.யூ.ஏ..உமர் இவ் வெற்றியில் பங்குதாரராகி மன்னார் வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மேற்படி போட்டியில் கிழக்கு மாகாண அணி முதலிடத்தை பெற்றுக் கொண்டது.

இதேவேளை தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் குழுமத்தை தெரிவு செய்வதற்காக கொழும்பில் நடைபெற்ற பரீட்சைக்கு தோற்றி பிரிவு 1(தரம் 6) இல் நாடளாவிய 100 பேரில் மன்னார் வலய மாணவர்கள் மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

மன்னார் புனித சேவியர் ஆண்கள் கல்லூரியை சேர்ந்த ஏ.யூ.ஏ.உமர், ஏ.டீ.ஆருஸான், மன்னார் டிலாசால் கல்லூரியை சேர்ந்த ஜீ.டிலோஸன் ஆகியோரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களாகும்.
பயிற்றுவித்த ஆசிரியர்களையும் ஒத்துழைத்து வழிகாட்டிய அதிபர்கள் மற்றும் பெற்றோரையும் கல்வி சமூகம் பாராட்டியுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :