காரைதீவு அம்பாறை பிரதான வீதியில் காரைதீவிற்கும் மாவடிப்பள்ளிக்கும் இடையில் அமைந்திருக்கும் பெரிய பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய ஒரு வழிப்பாதையாக நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக காணப்பட்டு வருகின்றது.
நூறு வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த இப்பாலம் அடிக்கடி தீந்தை பூசி பாலத்தின் உள் காணப்படும் உடைவுகள் மறைக்கப்பட்டு காணப்படுகின்றது.
”தெயட்ட கிருல” அபிவிருத்தி கண்காட்சி அம்பாறையில் இடம்பெற்ற போது இப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப் படுத்திய அமைச்சர்கள் , அரை மந்திரிகள் , பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இப்பாலம் சம்பந்தமாக தெரியப்படுத்தி இருந்த போதும் இப் பாலத்தின் மீது பலதடவைகள் பயணித்தும் இப் பெரிய பாலம் பற்றி கவனத்திற்கு கொள்ளப்படவில்லை.
நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்களும் ,கனரக வாகனங்களும் ஏனைய வாகனங்களும் பயணிக்கும் இப்பாலம் ஒருவழிப்பாதையாகவே இப்பாலம் கட்டப்பட்ட நாளிலிருந்து செயற்பட்டு வருகின்றது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித கவனமெடுத்து இப்பாலத்தை சீர் செய்து பாரிய அழிவிலிருந்து இப்பிரதேச மக்களை காப்பாற்றுமாறு கேட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment