வாழைச்சேனையில் படகு உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக பகுதியில் மீன் பிடித் தொழில் மேற்கொள்ளும் படகு உரிமையாளர்களால் தொழில் செய்வதில் ஏற்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு கோறி எதிர்ப்பு போராட்டத்தில் இன்று வியாழக்கிழமை துறைமுகம் முன்பாக ஈடுபட்டனர்.

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக நிருவாகம் மற்றும் மீன் பிடித் திணைக்களம் என்பவற்றுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

வெசல்; மொனிட்டரிங் சிஸ்டம் (ஏஆளு) கட்டணம் தொடர்பாகவும், ஐஸ் கட்டியின் விலை அதிகரிப்பு, தரமான வலை கிடைப்பதில்லை, துறைமுக இடம் பற்றாக்குறையாகவுள்ளதை நிவர்த்தி செய்து தருமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெசல்; மொனிட்டரிங் சிஸ்டம் (ஏஆளு) என்ற கருவியை அவுஸ்திரலிய அரசாங்கம் கடத்தல்களை கட்டுப்படுத்தும் திட்டத்தில் படகுகளை கண்கானிக்கும் நோக்கில் இலவசமாக வழங்கப்பட்ட கருவிகளுக்கு மாதாந்தம் ஆறாயிரம் ரூபா அறவிடுவதும் அப்பணத்தினை செலுத்தாத பட்சத்தில் படகு தொழிலுக்கு செல்வதற்கான அனுமதியை மறுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்ட காரர்கள் தெரிவித்தனர்.

இதன்போது படகு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தில் சுரண்டாதே, துறைமுக குறைபாடுகளை நிவர்த்தி செய், வி.எம்.எஸ். கட்டணம் செலுத்த முடியாது, ஐஸ் விலையை குறை என பல வாசகங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துறைமுகத்தில் முப்பத்தி நாலு அடி படகுகளை திருத்துவதற்கு கரைக்கு எடுப்பதறகு ஏற்கனவே இருந்த கட்டணம் 10500 ரூபா பெறப்பட்ட போதும் தற்போது அந்த கட்டணம் 28000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது இந்த கட்டணத்தையும் தங்களுக்கு குறைக்க வேண்டும் என்றும் கோறிக்கை விடுத்தனர்.
நாங்கள் ஒரு வருடத்திற்கு 150,000ஃஸ்ரீ க்கு மேலதிக செலவாக செலவளிக்க வேண்டி உள்ளது காரணம் வி.எம்.எஸ். கட்டணம், துறைமுக நங்கூர பணம் போன்ற செலவுகள்.

மீன்பிடி துறைமுகத்தில் ஏறத்தாள 150 படகுகளுக்கு மேல் நிறுத்த இடம் போதாது ஆனால் எங்கள் பிரதேசத்தில் ஐநூறு படகுகள் உள்ளது இதனால் நாங்கள் வேறு இடங்களில் வாடகை செலுத்தி தங்கியுள்ளோம் இதே நேரம் துறைமுகத்திற்கும் வாடகை செலுத்துவதால் ஒரு விடயத்துக்கு இரண்டு வாடகை செலுத்த வேண்டி உள்ளது. எனவே துறைமுகத்தில் படகு கட்டும் இடத்தினை நீளமாக்கி தந்தால் வேறு இடத்தில் படகு கட்ட வேண்டிய தேவை ஏற்படாது.

துறைமுக நிருவாகத்தினால் அறிமுகப்படுத்தியுள்ள புதிய புதிய செலவுகளால் மீன்பிடித் தொழிலை முன்னெடுப்பது மிகவும் சிரமமாக உள்ளது ஆகையால் படகு உரிமையாளர்களாகிய எங்களுக்கு தகுந்த தீர்வினை பெற்றுத்தருமாறு கேட்டுக் கொள்கின்றோம் என படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட படகு உரிமையாளர்களின் கோறிக்கை அடங்கிய மகஜர்களை பெற்றுக் கொள்ள எந்த அதிகாரிகளும் சமுகளிக்காத நிலையில் ஆர்ப்பாட்ட காரர்கள் கலைந்து சென்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :