குறிப்பாக வர்த்தகர் ஹாதிம் அவர்கள் மருதமுனை மக்களுடைய பாரம்பரியத்தினையும், அவர்களுடைய மிகவும் உயர்ந்த பண்புகளையும் மறந்து மிகவும் மோசமான சொற்பிரயோகங்களை பிரயோகித்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. அது மட்டுமல்லாமல் மருதமுனையில் தலைவர்களாக இருந்து மரணித்தவர்களைப் பற்றியும் தற்போது உயர் பதவிகளை பகிப்பவர்களைப் பற்றியுமான அவரது மோசமானதும், வன்மத்துடனானதுமான கருத்து பதிவுகளானது சாதாரண புத்தியுள்ள ஒரு மனிதரால் கூறுகின்ற கருத்தாக பார்க்க முடியாது.
ஒரு புத்தீசுயாதினமற்றவர்கள் கூறுவது போன்று உள்ளது. அவரது கருத்துக்கள் இன்றைய நாகரீக உலகத்தில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
மேலும் மருதமுனை மக்களுக்கு வேதனையளிக்க கூடிய செயற்பாடுமாகும் .மருதமுனை மக்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம் மக்கள் மத்தியில் வேதனைக்கு உட்படுத்தப்படுகின்ற இப் பதிவுகள் கண்டனத்துக்குறியவை.
இவருடைய வன்மம் சார்ந்த சொற்பிரயோக செயற்பாட்டை ஏனைய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இது ஒரு மோசமான வன்மத்தை தூண்டுகின்ற செயற்பாடாக கண்டிக்க வேண்டும்.
இவருடைய செயற்பாடு என்பது மருதமுனை மக்கள் மீது எவ்வாறு பழியையும் ,வன்மத்தையும் பதிவு செய்தாரோ அதேபோன்று குறிப்பாக 5 வருடங்களுக்கு முன்பு சாய்ந்தமருது மக்கள் மீதும் இவ்வாறான வன்மம் கலந்த கருத்துக்களை பதிவிட்டு இருந்ததை நாங்கள் மறக்கவில்லை.
இவருடைய வன்மம் சார்ந்த சொற்பிரயோக செயற்பாட்டை ஏனைய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இது ஒரு மோசமான வன்மத்தை தூண்டுகின்ற செயற்பாடாக கண்டிக்க வேண்டும்.
இவருடைய செயற்பாடு என்பது மருதமுனை மக்கள் மீது எவ்வாறு பழியையும் ,வன்மத்தையும் பதிவு செய்தாரோ அதேபோன்று குறிப்பாக 5 வருடங்களுக்கு முன்பு சாய்ந்தமருது மக்கள் மீதும் இவ்வாறான வன்மம் கலந்த கருத்துக்களை பதிவிட்டு இருந்ததை நாங்கள் மறக்கவில்லை.
மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் இருந்த போது அவர்களை துப்பாக்கியால் சுடுவேன் என்று பகிரங்கமாக பேசியதையும் முஸ்லிம் சமூகம் மறக்கவில்லை. அப் பெருந்தலைவருக்கு நிகழ்காலத்திலேயே அவருடைய 23வது ஞாபகார்த்த தினம் எதிர்வரும் 16ம் திகதி அனுஸ்டிக்கப்பட இருப்பதனால் அன்றைய தினத்தை குழப்ப வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்ததோடு சாய்ந்தமருது மக்கள் மத்தியில் நீலீக்கண்ணீர் வடிக்கின்ற மிக மோசமான குழப்பவாதியாக கல்முனை மாநகர பிரதேசத்தில் இவர் காணப்படுகின்றார்.
எனவேதான் எனது அன்புக்கும் நேசத்துக்குமுறிய மருதமுனை மக்களே!
இந்த வன்ம கருத்துகளை விதைத்த இந் நபர் எனக்கும் நீண்டகாலமாக மிக மோசமான வார்த்தை பிரயோகங்களையும், வன்மத்துடனான கருத்துகளையும், முகநூல்களிலும் ஏனைய சமுக வலைத்தளங்களிலும் எழுதி வருவதனை நீங்கள் யாவரும் அறிந்து இருப்பீர்கள். எனவே இவர் கூறிய கருத்துக்கள் என்பது ஒரு தனி நபரின் கருத்தாக நாங்கள் பார்க்க வேண்டுமே ஒழிய கல்முனை மக்களினுடைய கருத்தாகவோ,அல்லது கல்முனை மக்களுடைய ஒரு மக்கள் பிரதிநிதியாகவோ இவரை யாரும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
ஏனெனில் எந்தவொரு மக்கள் பிரதிநிதித்துவ சபையிலும் அங்கீகாரம் பெறாத ஒரு தனியான மக்களை குழப்புகின்ற நபராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கின்றார். ஒரு தனி நபர் கூறிய கருத்தினால் மருதமுனை மண்ணும்,மக்களும் வேதனைப்படுத்தப்பட்டு இருந்தால் உங்கள் வேதனையில் ஒரு பங்குதாரராக நான் மாறுவதோடு மனவேதனைக்கு உட்படுத்தியிருக்கும் மருதமுனை மக்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஆறுதல் வழங்க வேண்டும் என இறைவனை பிராத்திக்கின்றேன்.
சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் (பா.உ)
பிரதித்தலைவர் - ஸ்ரீ.ல.மு.கா
முன்னாள் இராஜாங்க அமைச்சர்
ஊடகப்பிரிவு
0 comments :
Post a Comment