அஸ்ஹர் இப்றாஹிம்-
அம்பாறை மாவட்ட செயலகத்தின் நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் உயர் கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய பாடசாலை மாணவர்களிடையே நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) உயர் தரப் பிரிவு மாணவர்களுகான விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரியின் அதிபர் ஏ.எச் பெளஸ் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது பாவனையாளர் உரிமைகள்,பொறுப்புகள்,சட்டங்கள், பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்மந்தமாக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இவ் விழிப்புணர்வு நிகழ்சிக்கு பிரதான வளவாளராக அம்பாறை மாவட்ட நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரி இஷட். எம் .ஸாஜீத் மற்றும் புலன் விசாரணை அதிகாரி எம்.எம் இர்ஷாத், ஏ.எல்.எம் சதான் ஆகியோருடன் பாடசாலை உயர்தர பிரிவு ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment