நிதியமைச்சின் கீழ் இயங்கும் .இலங்கை பட்டயக் வரி சம்பந்தமான நிறுவனம்.



அஷ்ரப் ஏ. சமத்-

கொழும்பு 6ல் தலைமையகத்தில் ஊடகவியலாளர் மாநாட்டை நேற்று 23 நடாத்தியது
இவ் ஊடக மாநாட்டில் லன்டன் பட்டய சான்றிதல் பெற்ற வரியாளர்கள் இந்
நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் அங்கத்துவம் வகிப்பவர்கள் சமூகமளித்திருந்தனர்

இந் நிறுவனத்தின் தலைவர் ரனில் அபேவர்த்தன இங்கு கருத்து தெரிவிக்கையில்

இந் நிறுவனம் நிதியமைச்சின் கீழ் இயங்கும் ஒர் நிறுவனமாகும். இதனை 1992 ல் தேசிய உள்நாட்டு இறை வரித் திணைக்களத்தின் உள்ள வரி சம்பந்தமான துறையில் லண்டன் பட்டய சான்றிதழ் பெற்றவர்கள் இணைந்து இதை உருவாக்கினார்கள்.....

இந் நிறுவனம் இலங்கையில் வரி அறவிடும் அரச தனியார் அதிகாரிகளுக்கு
ஆலோசனைகள் இத்துறை சம்பந்தப்பட்ட அரச, தனியார் வரியாளர்களுக்கு
பயிற்சிகள், பட்டய சான்றிதழ் பெறுவதற்காக வரியாளர்களுக்கு வகுப்புக்களையும் நடாத்தி வருகின்றது.அத்துடன் நிதியமைச்சிற்கு வரி அறவீடு கொள்கைகள், சம்பந்தமான ஆலோசனைகள் புதிய வரி அறவிட்டுத் திட்டங்களை வகுத்து சமர்ப்பித்தும் வருகிறது.

இந் நிறுவனம் ஆரம்பித்து 30 வருட காலமாக சேவையாற்றும் ஓர் அரச நிறுவனமாகும்

வரி சம்பந்தமான இலங்கையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அரசாங்க
தனியார் உத்தியோகத்தர்கள் மட்டுமே இலங்கை அரசுக்கு நிலையாக மாதந்த சம்பளத்தில்
வரி செலுத்துகின்றனர் அதனை விட அன்மையில் அரசாங்கம் அறிமுகப்படுத்திய வரிக் கொள்கையினால் 1இலட்சத்திற்கு மேல் சம்பளம் பெரும் சகல அரச தனியார் ஊழியர்கள் மாதாந்தம் வரி செலுத்துகின்றனர்
இதனால் அரச வைத்தியர்கள் கூட 1000க்கும் மேற்பட்டோர் அத் தொழில் இருந்து விலகி
வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்....அரசாங்கம் உள்நாட்டு வரி சம்பந்தமாக இந்த
நாட்டில் வாழும் சகல மக்களது அடையாள அட்டைகளைக் கொண்டு டிஜிட்டல் முறைமை அல்லது கனனிமயப்படுத்தல் திட்டம் இதுவரை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்தியா மற்றும் மேலைத்தேய சகல நாடுகளிலும்கூட கனனிமுறை நடைமுறையில் உள்ளது. ஆனால் இலங்கையில் சாதாரன மனிதனது வருமானம் அவர் தொழில் வியாபாரம் வங்கி உதவி நடவடிக்கையில் உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் தேசிய அடையாளத்தினைக் கொண்டு டிஜிட்டல் கனனிமயப்படுத்தப்படல் வேண்டும். அவ்வாறாயின் இலங்கையில் முறையான வரி அறிவிடுதல் முறையை இலகுவாகக் செயலாற்ற முடியும்.

இம்முறைமை இல்லாமையால் இலங்கையில் பாரிய கம்பனிகள், வெளிநாட்டு நிறுவனங்கள்,முதலிட்டாளர்கள் மில்லியன் கணக்கியல் இறைவரித் திணைக்களத்திற்கு வரி செலுத்தாமல் உள்ளனர். சில அரசியவாதிகள் கூட அவர்களிடம் உள்ள நிறுவனங்களின் வரி செலுத்தாமல் தப்பித்துக் கொள்கின்றனர்.

இந்த நாட்டில் சாதானரமாக 3 பேர் கொண்ட ஓர் குடும்பத்திற்கு 1இலட்சத்து 50 ஆயிரம் ருபா
வாழ்க்கைச் செலவு தேவைப்படுகிறது...கடந்த பொருளாதார சீர்கேடு மற்றும் ,கொவிட் தொற்று காரணங்கள் ரசியா -யுக்ரைன் யுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் நாம் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றோம்

எமது நாட்டில் பல்வேறு கம்பனிகள், தொழிற்சாலைகள், மூடப்பட்டுள்ளன. இதனால் இல்ஙகையில் மனித வலு சாதாரண தொழிலாளிகள் தமமு சொந்த தொழில்களை இழந்துள்ளனார். அவர்கள் வாழ்வாதாரத்திற்காக பெரிதும் கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனா் அரசாங்கத்தில் மற்றும் தனியார் நிறுவனங்களில் மட்டும்

மாதாந்தம் அரச சம்பளம் எடுப்பவர் தனது குடும்பத்தினை கொண்டு செல்ல முடியாத
அளவுக்கு எமது நாட்டின் பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு அரசாங்கம் முறையான ஒரு திட்டத்தினை வகுத்து எமது வீழ்ச்சியடைந்த வருமானத்தினை
பெருக்குவதற்கும் மக்களது பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கும முன்வருதல்
வேண்டும் என வரி சம்பந்தநமான நிறுவனத்தின் தலைவர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிததார்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :