வி.ரி.சகாதேவராஜா-
பொத்துவில் வரலாற்றில் இரட்டைச் சாதனை புரிந்த கபொத உயர்தரத்தில் மூன்று ஏசித்தி பெற்ற றொட்டைக்கிராம மாணவி செல்வி சாந்தலிங்கம் றியோன்சியாவை மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் நேற்று(11) திங்கட்கிழமை நேரில் சென்று பாராட்டினார்.
அவருக்கு பரிசுப் பொருட்களை வழங்கியதோடு, பல்கலைக்கழகம் சென்று படிப்பைத் தொடர விசேட புலமைப் பரிசில் ஒன்றையும் வழங்கினார்.
பொத்துவில் ஊரணி சரஸ்வதி வித்யாலயத்தில் வைத்து அவருக்கான பாராட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இராமகிருஷ்ண மிஷனினால் நடைமுறைப்படுத்தப் பட்டு வரும் பல்கலைக்கழகம் சென்று படிக்கும் வரையான காலப்பகுதிக்கான புலமைப் பரிசில் திட்டத்தில் றியோன்சியாவும் உள்வாங்கப் பட்டுள்ளார்.
அங்கு சுவாமி அதற்கான ஆவணங்களை சாதனை மாணவியிடம் வழங்கி வைத்தார்..
மாணவி றியோன்சியா வரலாற்றில்
அடிப்படை வசதிகளற்ற றொட்டைக்கிராமத்தின் முதல் 3ஏ பெற்ற சாதனை மாணவி என்பதோடு
பொத்துவில் தமிழ் மகா வித்தியாலயத்திற்கும் முதல் 3ஏ சாதனை பெற்று இரட்டை சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment