சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். வித்தியாலய புலமை மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல்.


அஸ்ஹர் இப்றாஹிம்-

2023ம்
ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்) மாணவர்வர்களைத் இறுதிக்கட்ட தயார்படுத்தல் சம்மந்தமாகவும், முன் ஆயத்தங்கள் மற்றும் மேலதிக பயிற்சி தொடர்பாகவும் முக்கிய கலந்துரையாடல் ஒன்று பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்லியாஸ் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.

இதன் போது மாணவர்களை உளவியல் ரீதியாக ஊக்கப்படுத்துவது மற்றும் ஆலோசனைகளை வழங்குவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இக் கலந்துரையாடலின் போது பிரதி அதிபர் திருமதி குறைசியா ராபி, உதவி அதிபர் எம்.ஏ.ஸி.எல். நஜீம், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம்.றியாஸ், ஐந்தாம் ஆண்டு வகுப்பாசரியர்களில் ஒருவரான எம்.ஸி.ஏ. ஜாபிர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :