வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கு மாகாணத்தில் புதிதாக சொற்பொழிவாளர் ஒன்றியம் ஒன்று உதயமாகி உள்ளது.
சைவத் தமிழர்களின் விஞ்ஞான மெய்ஞான தொடர்புகளையும் ஆலயங்கள், அறநெறிப்பாடசாலைகள், சமய நிகழ்வுகளில் போதித்து சமூகத்தை நன்நெறிப்படுத்தும் நோக்கில் இவ் அமைப்பு உருவாக்க பட்டுள்ளது.
கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் என்ற பெயரில் உதயமாகி உள்ளது.
நிருவாக கட்டமைப்பை உருவாக்கும் கூட்டம் கல்முனை தரவை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம் பெற்றது.
இதன் போது ஒன்றியத்தின் தலைவராக சிவஸ்ரீ க.வி.பிரமீன் சர்மா
பொதுச்செயலாளராக சிவத்திரு தினேஸ்குமார்
பொருளாளராக சிவத்திரு மோகன்
அம்பாறை மாவட்ட உப தலைவராக சிவத்திரு லக்குணம்
உப செயலாளராக சிவத்திரு தமிழகரன் சனாதனன்
இணைப்பாளராக சிவத்திரு பிரதீபன் ஆகியோரும் சபையினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள நிர்வாக கட்டமைப்பை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்திற்கும் விஸ்தரிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதுடன் இந்த நல்ல செயலை ஆரம்பிக்கும் முகமாக ஆலய வளாகத்தில் ஒன்றியத்தினால் மரக்கன்றும் நடுகை செய்யப்பட்டது. இதில் தன்னார்வமாக இணைந்து செயற்பட சகல சொற்பொழிவாளர்களையும் சமூக செயற்பாட்டாளர்களையும் அழைத்து நிற்கின்றனர்.
0 comments :
Post a Comment