கனடாவில் களைகட்டிய காரைதீவு பேராசிரியர் பாலசுந்தரத்திற்கான சிறப்பு பாராட்டு விழா!


வி.ரி.சகாதேவராஜா-

னடா சுவாமி விபுலானந்தர் கலை மன்றம், கனடாவில் வாழும் காரைதீவைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் இளைய தம்பி பாலசுந்தரம் அவர்களுக்கு பெரும் பாராட்டு விழா ஒன்றை நேற்றுமுன்தினம் (17) ஞாயிற்றுக்கிழமை மாலை நடாத்தியது.

பேராசிரியர் முனைவர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்களுக்கான வாழ்நாள் செயல் திறங்களுக்கான சிறப்பு பாராட்டு விழா நேற்றுமுன்தினம்17) மாலை 5 மணிக்கு கனடா ஒன்றாரியோ தமிழ் இசைக்கலா மன்றத்தில் நடைபெற்றது .

கனடா சுவாமி விபுலானந்தர் கலை மன்றத்துடன் அண்ணாமலை பல்கலைக்கழக கனடா வளாகம் ,கனடா கவிஞர் கழகம் ,கனடா தொல்காப்பியர் மன்றமும் இணைந்து விழாவை ஏற்பாடு செய்தது.

கனடா சுவாமி விபுலானந்தர் கலை மன்ற தலைவர் எல். புருசோத்தமன் தலைமையில், விழாக்குழுத்தலைவர் எழுத்தாளர் கல்வியியலாளர் க. குமரகுரு ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.

கனடாவில் வாழும் காரைதீவைச் சேர்ந்த பிரபல சமூக செயற்பாட்டாளர் வைத்திய கலாநிதி டாக்டர் அ.வரதராசன் வரவேற்றார்.

பேராசிரியர் முனைவர் இளையதம்பி பாலசுந்தரத்தின் மனைவி விமலா பாலசுந்தரம் அவர்களின் ஏக புத்திரன் கலாநிதி இளமாறன் பேரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.

"செந்தமிழ் பேரொளி" என்ற சிறப்பு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு அதே பெயரில் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.

மன்ற செயலாளர் நித்திசிவானந்தராஜா பொருளாளர் எஸ். உதயகுமாரன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் என பல தரப்பட்ட பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

பேராசிரியர் முனைவர் இளையதம்பி பாலசுந்தரம் கல்வியியலாளராகவும், துணிந்த எழுத்தாளராகவும், ஆழ்ந்த ஆய்வாளராகவும்,தமிழ் இலக்கியம் மொழியியல் பண்பாடு இந்து சமயம் சமூகம் போன்ற துறைகளில் கடந்த 50 ஆண்டுகளாக அயராது உழைத்து செயல் திறன்கள் செய்த அறிஞர்.
இவர் இதுவரை 22 நூல்களை வெளியிட்டுள்ளார் அவர் பணிகளைப் பாராட்டி இப் பெருவிழா எடுக்கப்படுகிறது.

இதேவேளை பேராசிரியர் முனைவர் இளையதம்பி பாலசுந்தரம் மதுரை உலகத் தமிழ் சங்க இலக்கிய விருதுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :