சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு தேசிய ரீதியாக பாராட்டுகள்

நூருல் ஹுதா உமர்-


லக நோயாளர் பாதுகாப்பு தினத்தை (செப்டம்பர் 17) முன்னிட்டு சுகாதார அமைச்சினால் வைத்தியசாலைகளுக்கிடையில்
நடாத்தப்பட்ட நோயாளர்களின் பாதுகாப்பை பலப்படுத்த மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள் போட்டியில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை தேசிய ரீதியாக தெரிவு செய்யப்பட்டு இரண்டு பாராட்டுச் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டது.

தேசிய நோயாளர் பாதுகாப்பு தின நிகழ்வுகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதி டாக்டர் அலகா சிங் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அசேல குணவர்தன ஆகியோரின் முன்னிலையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி அஸாத் எம் ஹனிபா கலந்து கொண்டிருந்தார்.

நோயாளர்களின் கருத்துக்களை உள்வாங்கி அவர்களின் பங்குபற்றுதலுடன் எவ்வாறு நோயாளர்களுக்கு உயர்தரமான மற்றும் பாதுகாப்பான சுகாதார சேவையை வழங்குதல் எனும் தொனிப்பொருளில் இவ்வருட நோயாளர் பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :