கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகள் அட்டாளைச்சேனைக்கு திடீர் விஜயம்


எம்.எம்.றம்ஸீன்-

ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ,பிரதிப் பணிப்பாளர், திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி, உயிரியல் மருத்துவப் பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு நடைபெறும் பீ.எஸ்.எஸ்.பீ செயற்றிட்டம் தொடர்பான வேலைத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களினால் கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்

குறித்த கலந்துரையாடலின் போது கல்முனை பிராந்திய மருந்து விநியோகப் பிரிவினை குறித்த வைத்தியசாலைக்கு இடம் மாற்றுவதனை துரிதப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களிடமும் தமது பணிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும் வைத்தியசாலையிலிலுள்ள உபகரணங்களின் நிலைமை மற்றும் பாவனைக்குட்படுத்தப்படும் நடைமுறைகள் தொடர்பிலும் நேரடி அவதானம் செலுத்தப்பட்டது

குறித்த விஜயத்தின்போது கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளையும் சிபாரிசுகளையும் விரைவில் செய்வதற்கான பொறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதுடன் இதனை விரைவுபடுத்துமாறும் பணிப்பாளர் குறித்த குழுவினரிடம் வேண்டுகோள் விடுத்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :