பௌத்த சாசனம் மற்றும் மதவிவகாரங்கள் கலாச்சார அமைச்சின் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் நிகழ்வு!



அஷ்ரப் ஏ சமத்-
பௌத்த சாசனம் மற்றும் மதவிவகாரங்கள் கலாச்சார அமைச்சின் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம், (Building Bridge Programme) சர்வமதங்கள் நல்லுரவைக் கட்டியெழுப்புதல் திட்டத்தின் கீழ் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம், தெஹிவளை களுபோவில ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் வெள்ளவத்தை மத்திய இஸ்லாமியக் கல்வி நிலையமும் இணைந்து இத் திட்டத்தினை இன்று 21 தெஹிவளைப் பள்ளிவாசலில் நடாத்தியது.

இந் நிகழ்வு தெஹிவளை ஜூமஆப் பள்ளிவாசல் பரிபாலன சபையினர், மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் இசட் ஏ.எம். பைசால் , ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பௌத்த சாசன அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.குமாரி, ஹிந்துக் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் வை. அனிருத்தன், கலாச்சாரத் திணைக்களம், கிறிஸ்துவ விவகார மற்றும் பௌத்த விவகார திணைக்களத்தின் அரச ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு வெள்ளவத்தை இஸ்லாமிய நிலையத்தின் உறுப்பிணர்களினால் முஸ்லிம்களது மதவிவகாரம், ஜவேலைத் தொழுகை முறைகள், கொழுகைக்கான பாங்கு அழைப்பு, பள்ளிவாசல்களது, கட்டிட நிர்மாணமுறைகள், தொழுவதற்காக நீரினால் எவ்வாறு சுத்தம் செய்தல், குர்ஆன் விளக்கங்கள், அரபு எழுத்தனி முறைகள், திருமன முறைகள் , முஸ்லிம் ஒருவர் காலமாகினால் அவருக்கு 24 மணி நேரத்துக்குள் ஜனசா நல்அடக்கம் செய்யும் முறைகள் , கனவன் காலமானதவுடன் மனைவி 4மாதங்களும 10 நாட்கள் இத்தா முறை, இங்கு விளக்கமும் செயல்முறைகளும் காண்பிக்கப்பட்டது.
அத்துடன் முஸ்லிமகளது விருந்தோம்பலும் பள்ளிவாசலில் கலந்துகொண்டவர்களுக்கு பள்ளிவாசலினால் பரிமாறப்பட்டது.........

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சின மேலதிகச் செயலாளர் குமாரி ....இத் திட்டத்தின் மூலம் வாழ்க்கையில் முதற்தடவையாக பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து அவர்களது இஸ்லாமிய மத விவகாரத்தினை தெரிந்து கொண்டதாகவும். இதனை ஏற்படுத்திய திணைக்களமும் மற்றும் மௌலவிமார்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக மேலதிகச் செயலாளர் திருமதி குமாரி தெரிவித்தாா் தொடா்ந்தும் இது போன்ற நிகழ்ச்சிகள் இந் நாட்டில் உள்ள ஏனைய அரச ஊழியர்களுக்கும் மதங்களுக்கிடையிலான சந்தேகங்களையும் மதங்களில் உள்ள நல்ல விடயங்களை தெரியாதவற்றை தெரிந்து கொள்ளும் முறைமை சாலச் சிறந்ததாகும்...எனத் தெரிவித்தார்...







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :