அறபா வித்தியாலயம் சாதனை


எஸ்.எம்.எம்.முர்ஷித் -

ண்மையில் வெளியாகிய கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சையில் சாதனை படைத்த மாணவிகள் இன்று புதன் கிழமை பாடசாலை சமுகத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஓட்டமாவடி கல்வி கோட்டத்தில் கஸ்டப்பிரதேச பாடசலையான தியாவட்டுவான் அறபா வித்தியாலய மாணவர்கள் உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சாதனை படைத்துள்ளனர்.

தியாவட்டுவான் அறபா வித்தியாலயத்தில் கல்வி பொதத்தராதர உயர் தரப் பரீட்சையில் 2022ம் ஆண்டு முதற்தடவையாக கலைப்பிரில் பரீட்சைக்கு எட்டு மாணவர்கள் தோற்றியதில் அதில் நான்கு மாணவிகள் பலகலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவதற்கு தகுதி பெற்றுள்ளதுடன இரண்டு மாணவிகள் கல்வியற் கல்லூரிக்கு தெரிவு செய்யப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று பாடசாலையின் அதிபர் ஏ.எல்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.

சித்தியடைந்த மாணவர்களும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு ஆசிரியர் சமுகத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

பாடசாலைக்கு பெறுமை சேர்த்துக் கொடுத்த மாணவர்களுக்கும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலையில் உயர்தர வகுப்பு வைப்பதற்கு முயற்சித்த பிரதேச பள்ளிவாயல் நிருவாகம், கல்வி அதிகாரிகள், கிராம அபிவிருத்தி சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் தனது சார்பாகவும் பாடசாலை சார்பாகவும் நன்றிகளை தெரிவிப்பதாக அதிபர் ஏ.எல்.இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :