ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்துக்கு தெரிவு.






எம்.என்.எம்.அப்ராஸ்-

கிழக்கு மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றிய கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர் கிழக்கு மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகள் கடந்த 19ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்த போட்டியில் இதில் 20 வயதின் கீழ் பிரிவு ஆண்களுக்கான 200M மீட்டர் மற்றும் 400M ஓட்ட நிகழ்ச்சியில் பங்குபற்றிய எஸ்.எம்.அஜாத் மூன்றாமிடத்தை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியதுடன்,20 வயதின் கீழ் பிரிவு ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டி ஜே.புதைர் அஹ்மட் இரண்டாம் இடத்தையும்,20 வயது கீழ் பிரிவில் ஆண்களுக்காக அஞ்சல் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகி பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்தனர்.

இவ் வெற்றிக்காக உறுதுனையாய் இருந்து மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் எம்.ஐ ஜாபிர்,மற்றும் பிரதி,உதவி அதிபர்கள்,மாணவர்களை வழி நடாத்தி பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர்கள்,விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர்கள், மற்றும் போட்டிகளில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டி வெற்றிபெற்ற மற்றும் பங்குபற்றிய மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கு,போட்டிகளில் பங்கேற்க தேவையான உதவிகளை மேற்கொண்ட அனைவருக்கும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுகுழு (SDEC) மற்றும் பழைய மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :