தனது பல்கலைக்கழகத்தில் மறைந்த இலக்கியவாதியும் பெருந் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் ஞாபகார்த்தமாக கடந்த 30 ஆண்டுகளாக அவர் பெயரில் ஒரு புலமைப்பரிசில் திட்டத்தினை நடாத்திவருகின்றோம்.. மறைந்த எம்.எச்..எம். அஷ்ரப் 23 ஆவது ஆண்டு மறைவு தினமான செப்டம்பர் 16ல் சாய்ந்தமருதுாரில் நடைபெற்ற கூட்டத்திற்காக ஞாபகார்த்த பேருரை நிகழ்த்துவதற்காக என்னை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அழைப்பின்பேரிலேயே இலங்கை வந்தாக பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
பேராசிரியரை அப்துல் காதரை நேற்று 18 அவர் தங்கியிருந்த வெள்ளவத்தை குலோபல் டவர் ஹோட்டலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரத்தின் தலைவர் என்.எம். அமீன் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர் புர்ஹான் பீபி இப்திக்கார் ஆகியோர் சந்தித்து உரையாடினார்கள்.
பேராசிரியர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்..
மறைந்த மாமனிதர் அஷ்ரப் அவர்கள் அமைச்சராக இருந்த காலத்தில் நானும் கவிக்கோ அப்துல் ரஹ்மான் இலங்கையில் நடைபெற்ற கம்பன் விழாக்கல் கவியரங்குகள், அட்டாளைச்சேனை மீலாதுன் நபி விழாக்களில் கலந்து சிறப்பித்துள்ளோம். அஷ்ரப் இந்தியா வந்ததும் அங்கு அவருடன் நாங்கள் நட்பைக் கொண்டிருந்தோம்..அதே போன்று தற்போதைய தலைவர் ரவுப் ஹக்கீமுடன் எமது நட்பு இருந்து வருகின்றது.
பேரசிரியர் - 40 நுால்கள் எழுதியுள்ளார்...தமிழ் நாட்டில் அவருக்கு முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது. தமிழ் பற்றிய மாநாடுகள் விழாக்கலில் உரையாற்றுபவர்.. தமிழ் மொழி சம்பந்தமான சங்கத்தின் தலைவர்,..... தமிழ் மொழியிலேயே கலாநிதி.பட்டம் பெற்று கம்பராமயானத்தில் முதுநிலைப்பட்டம் பெற்றவர் வானம்பாடி மன்றம் மற்றும் தமிழ்த் துறை தலைவராகவும் பதவி வகித்துள்ளார்....இவ்வாறு சிறந்த அறிவினைக் கொண்ட கவிஞர் மேடைப் பேச்சாளர் ஆராய்ச்சியாளர்
இந் நிகழ்வில் ஊடகவியலாளர் திருச்சி சாஹூல் ஹமீத் கலந்து கொண்டார் பேராசிரியை இலங்கையில் உள்ள தமிழ் ஊடக நிறுவனத்தின ஊடகவியலாளர்கள் சந்தித்து அவரை நேர்காணலிலும் ஈடுபட்டனர்.
நேற்று திங்கற் கிழமை (18 )காலை இந்தியா அவரது ஊரான வானம்பாடி பயணமானார்.
0 comments :
Post a Comment