களுவாஞ்சிக்குடியில் சர்வதேச கரையோர பாதுகாப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் வாரம் ஆரம்பம்



வி.ரி.சகாதேவராஜா-
ர்வதேச கரையோர பாதுகாப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் வாரத்தினை முன்னிட்டு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வானது நேற்றைய தினம் (2023.09.19) பெரியகல்லாறு மற்றும் களுவாஞ்சிகுடி கிராம சேவகர் பிரிவுகளில் தூய்மைப்படுத்தும் சிரமதானம் ஆரம்பமாகியது.

பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் இடம்பெற்ற இந் நிகழ்ச்சித்திட்டமானது கிழக்கு மாகாண ஆளுனரின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் கிழக்கு கரையோரங்களை தூய்மையாக பேணுதல் எனும் திட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பொதுமக்களுடன் இணைந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கடல் சார் சூழல் அதிகார சபை மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கரையோரங்கள் சுத்தம் செய்யப்பட்டன.

மேலும் இந் நிகழ்வினை பிரதேச செயலக கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான தயோ. நிசந்தராசன் மற்றும் ஆ. ஜெகரூபன் ஆகியோர் இணைந்து ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :