உள்ளூராட்சி மன்ற தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்குங்கள் இம்ரான் கான்.


ஹஸ்பர்-

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் சுமார் எட்டு வருடங்களுக்கு மேலாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்கள் தங்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்களைச் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

 அதன்பொழுது அவர்களின் கோரிக்கையினை உரிய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்திருந்தார்.

அதற்கமைய இன்று (05) உள்ளூராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த அவர்களை கொழும்பில் உள்ள அமைச்சில் சந்தித்து கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் நீண்ட காலமாக தற்காலிக மற்றும் ஒப்பந்தம் அடிப்படையில் கடமையாற்றுபவர்களை நிரந்தரமாக்குவது சம்பந்தமாக கலந்துரையாடினார்.

இவ்விடயம் சம்பந்தமாக அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஆராய்ந்து பதிலளிப்பதாக இராஜாங்க அமைச்சர் இதன் போது கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :