மட்டக்களப்பு பல்கலைக்கழகம் இராணுவத்தினரால் கையளிப்பு.


எஸ்.எம்.எம்.முர்ஷித்-

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மட்டக்களப்பு பல்கலைக்கழகம் இன்று புதன்கிழமை (20.09.2023) அதன் தவிசாளரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனருமாகிய எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஈட்டர் தாக்கதலை அடுத்து இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அதனை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று சிகிச்சை நிலையமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலயே இருந்து வந்தது.

இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் இன்று மட்டக்களப்பு பல்கலைக்கழகம் இராணுவத்தினரால் அதன் நிருவாகிகளிடம் கையளிக்கப்பட்டது.

இதன் போது மட்டக்களப் பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், பொது முகாமையாளர் எஸ்.எம்.தாஹிர், ஹிராஸ் பவுன்டேசன் அமைப்பின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனி, அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஹாறூன் ஸஹவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :