கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலில் பிரதேச செயலகம் தோறும் நடமாடும் சேவைகள்


எஸ்.எம்.எம்.முர்ஷித்-

னாதிபதி ரனில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைவாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண சுகாதார சமுக சேவைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் பிரதேச செயலகம் தோறும் நடமாடும் சேவைகள் நடாத்தப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த நடமாடும் சேவை இன்று புதன்கிழமை கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது.

முதியோர், விஷேட தேவையுடையோர், வருமானம் குறைந்தவர்களுக்கான இலவச வைத்திய முகாம் இடம் பெற்றதுடன் பொலிஸ் திணைக்களம், காணி திணைக்களம், சமுர்த்தி திணைக்களம், பதிவாளர் பிரிவு, அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சிறுவர் பெண்கள் பிரிவு, போன்ற பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

கிரான் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மாவட்ட சமுக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார், கிரான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.சிவலக்ஷன், சமுக நல மருத்துவர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், காணி உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், கிராம சேவை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது சிறுவர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் விஷேட தேவையுடையோருக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன் சமுர்த்தி பயனாளிகளுக்கு தொழில் முயற்சிக்காக கடனடிப்படையில் ஐம்பதாயிரம் ரூபா வீதம் 20 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :