ஹஸ்பர்-
கிழக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி தமிழ்ப் பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு.
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் கீழ் உள்ள அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி தமிழ்ப் பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வானது (04) மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் கட்டான பொலிஸ் பயிற்சி பிரிவின் பணிப்பாளருமாகிய புத்திக சமரபால அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இக் கற்கை நெறியானது கிழக்கு மாகாணத்தில் பணி புரிகின்ற சிங்கள மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 150 மணித்தியாலங்களை கொண்ட இவ்
இரண்டாம் மொழி தமிழ்ப் பயிற்சி நெறியில் 215 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப்பயிற்சி நெறியானது உத்தியோகத்தர்களின் தமிழ் மொழி ஆற்றலை விருத்தி செய்வதற்கும் கடமையின் போது வேலைகளை இலகுபடுத்திக் கொள்வதற்கும் ஏதுவாக அமைகின்றது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் , உதவி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்(கட்டான),ஏனைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உதவியாளர் ,வளவாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment