அபு அலா -
சுதேச மருத்துவம் தொடர்பான சர்வதேச மாநாடு, கல்வி மற்றும் வார்த்தகக் கண்காட்சி கடந்த 8, 9, 10 ஆம் திகதிகளில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகோடி தலைமையில் இடம்பெற்ற இந்த சர்வதேச மாநாடு, கல்வி மற்றும் வார்த்தகக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்த்தன கலந்துகொண்டு வார்த்தகக் கண்காட்சியின் கூடத்தை திறந்து வைத்து ஆரம்பித்து வைத்தார்.
கடந்த 8, 9, 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இந்த சர்வதேச மாநாடு, கல்வி மற்றும் வார்த்தகக் கண்காட்சியில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான (கலாநிதி) பந்துல குணவர்தன, கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும், சுதேச அமைச்சின் உயரதிகாரிகள், மாகாண சுதேச மருத்துவத் திணைக்களங்களின் மாகாண ஆணையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த சர்வதேச மாநாடு, கல்வி மற்றும் வார்த்தகக் கண்காட்சியில் 9 மாகாண சுதேச மருத்துவத் திணைக்களங்களின் காட்சிக் கூடாரங்களும், 35 ஆயிர்வேத, சித்த யூனானி மற்றும் பாரம்பரிய தனியார் நிறுவனங்ககளின் காட்சிக் கூடாரங்களும் அமைக்கப்பட்டு தங்களின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனையும் செய்து வைத்தனர்.
ஆயுர்வேத, சித்த, யூனானி மற்றும் பாரம்பரிய முறையில் தாயாரிக்கப்பட்ட மருத்துவப் பொருட்கள், அழகுசாதனைப் பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்ற பல்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட அதேவேளை, அதற்கான மருத்துவ விளக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
குறிப்பாக, இன்றைய காலத்திற்கேற்ப நவீன முறையில் ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்பட்ட அமுக்கரா, சத்துமா பிஸ்கட் வகைகள் மற்றும் வல்லாரை கேக் போன்றவற்றை கிழக்கு மாகாண சுதேச மருத்துத் திணைக்களத்தினால் உடனுக்குடன் தயாரிக்கப்பட்டு மிக அழகிய வடிவில் பொதி செய்யப்பட்டு விற்பனை செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment