நூருல் ஹுதா உமர்-
தாயிலிருந்து சிசுவிற்கு HIV மற்றும் SYPHILIS பரவுவதனைத் தடுப்பதற்கான செயற்றிட்டம் தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச்சுகாதார தாதியர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு இன்று (20) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய பாலியல் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது சூம் தொழிநுட்பத்தின் ஊடாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்கள் தலைமை உரையாற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். குறித்த நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.பீ.அப்துல் வாஜித், திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
தாயிலிருந்து சிசுவிற்கு HIV மற்றும் SYPHILIS பரவுவதனைத் தடுத்தல், குறித்த நோயாளர்களுக்கான சிகிச்சை மற்றும் பரிசோதனைகள், குறித்த நோய் தொடர்பிலான விழிப்புணர்வு வேலைத்திட்டம் தொடர்பாகவும் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் பியூமி பெரேரா இந்நிகழ்வின் போது பிரதம வளவாளராகக் கலந்துகொண்டு விரிவுரையாற்றியதுடன் பாலியல் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.என்.எம்.தில்ஷான், தொற்றுநோய் தடுப்புப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் டொக்டர் எம்.ஏ.சீ.எம்.பஸால், பொது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எ.எம்.ஹில்மி ஆகியோரும் இந்நிகழ்வில் வளவாளர்களாக கலந்துகொண்டனர்
0 comments :
Post a Comment