அஸ்ஹர் இப்றாஹிம்-
கல்முனை பிரதேச கரைவலை மீனவர்களுக்கு கடந்த ஒருவார காலமாக தமது வலையில் அதிகளவில் கீரிமீன் பிடிக்கப்படுவதால் மிகவும் மகிழ்ச்சியடைவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
கடந்த வருடங்களைப் போலல்லாது இவ்வருட இறுதிப் பகுதியில் தினசரி அதிகளவில் மீன்கள் பிடிக்கப்படுவதால் தமது பொருளாதார நிலமையை சற்று சீர் செய்யக்கூடியதாக உள்ளதுடன், இம் மீன்களை கொள்வனவு செய்வதற்காக அம்பாறை மாவட்டத்தின் கடற்கரைப் பிரதேசத்தில் வசிக்காத மக்கள் கடற்கரைப் பிரதேசத்திற்கு வந்து அதிகளவில் மீன்களை கொள்வனவு செய்வதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
கல்முனை, சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பிரதேச கடற்கரையோரம் பாரிய கடலரிப்பிற்கு உள்ளாகியுள்ள போதிலும் கரைவலை மீனவர்கள் மிகவும் உட்சாகமாக தினசரி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிடிக்கப்படும் மீன்கள் கொழும்பு, கண்டி,நுவரெலியா மற்றும் குருநாகலை போன்ற இடங்களுக்கு அனுப்பப்படுவதுடன் மேலதிக மீன்களை கருவாடாக மாற்றும் முயற்சியிலும் பிரதேசவாசிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment